அமெரிக்க இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்; ஏழு பேர் படுகாயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்-அசாத் முகாமை இலக்கு வைத்து பல ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஐந்து அமெரிக்க சேவை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், தனது படை வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது.

ஏவுவதற்கு தயாராக இருந்த எட்டு ரொக்கெட்டுகளுடன் கூடிய ட்ரக் வண்டியொன்று அந்நாட்டு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இராணுவ தளத்தை தாக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஈராக் அரசாங்கத்தின் பாதுகாப்பு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button