பைடனுக்கு சொந்த கட்சியினரே வைத்த செக்: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து ஜனாதிபதி ஜோ பைடன் விலகியது குறித்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியினரின் நாசவேலை காரணமாக பைடன் தேர்தல் போட்டியை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
மின்னசோட்டாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய டிரம்ப் அவர், ஜனநாயகக் கட்சியினருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
‘இது 14 மில்லியன் வாக்குகளைப் பெற்ற ஒருவரின் ஆட்சிக் கவிழ்ப்பு ஆகும். அவர் போட்டியிட விரும்பினார். எனினும், அவரின் சொந்தக் கட்சியினரே இந்த வாய்ப்பை வழங்கவில்லை.
“பைடனைப் பொறுத்தவரை, அவர் ஜனாதிபதி” என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். 25வது திருத்தத்தை மேற்கோள் காட்டி பைடனை அச்சுறுத்தியுள்ளதாக டிரம்பு குறிப்பிட்டுள்ளார்.
மனதளவிலும், உடலளவிலும் குழம்பிப் போயிருப்பதாகவும், வெளியேறாவிட்டால் 25ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வெளியேற்றப்படுவீர்கள் என்றும் பைடனை எச்சரித்துள்ளனர்.
பைடன் துணிச்சலானவர், தைரியமானவர் என்று டிரம்ப் குற்றம் சாட்டியதோடு, தேர்தல் போட்டியிலிருந்து இருந்து விலகும்படி கட்டாயப்படுத்தியதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.