டிரம்ப்பின் காதைத் துளைத்தவை துப்பாக்கிக் குண்டுகள்தான்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனால், அவரது வலது காதில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
இந்தப் படுகொலை முயற்சியில் ஈடுட்ட நபர் மாண்டுவிட்டதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில், டிரம்ப்பின் வலது காதைத் துளைத்தவை துப்பாக்கிக் குண்டுகள்தான் என நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அமெரிக்கப் புலன் விசாரணைப் பிரிவு தெரிவித்தது.
மேலும், அது முழு துப்பாக்கிக் குண்டாகவோ துப்பாக்கிக் குண்டுத் துகள்களாகவோ இருக்கலாம் என்று அது விளக்கமளித்தது.
டிரம்ப்பின் காதைத் தாக்கியது துப்பாக்கிக் குண்டுகளா கூர்மையான பொருள்களின் துகள்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என அந்நாட்டின் புலன் விசாரணைப் பிரிவு இயக்குநர் கிறிஸ்டோபர் ரே ஜூலை 24ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.