நாமல் வீட்டில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம்: மோதலாக மாறுவதை தடுத்த ஷிரந்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்று இரவு வந்திருந்த லொஹான் ரத்வத்தவுடன் ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக உருவாகுவது வீட்டில் உள்ளவர்களின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது தொடர்பில் இருவருக்கும் இடையில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்சவின் தலையீட்டில் இந்த வார்த்தைப் பரிமாற்றம் மோதலாக மாறாமல் தடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என லொஹான் ரத்வத்த கோரியுள்ளார்.

ஆனால் அதற்கு நாமல் ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், அதற்கான காரணங்களையும் முன்வைத்துள்ளார். இதன் காரணமாகவே இந்த வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button