சேவலிடமிருந்து மனிதன் இதை கற்றுக்கொள்ள வேண்டும்: சாணக்கிய நீதி

சாணக்கிய நீதி, சில விலங்குகளிடமிருந்தும் நல்ல குணநலன்களை மனிதர்கள் கற்றுக்கொள்ளலாம் எனக் கூறுகிறது.

உலகில் அனைத்து விலங்குகளை விடவும் மனிதன் மேலானவன் என்றாலும்கூட நல்ல விடயங்களை யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.

அதன்படி, சேவலிடமிருந்து சில அற்புத குணாதிசயங்களை மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என சாணக்கிய நீதி கூறுகிறது.

காலையில் எழும்புதல்

சாணக்கியரின் கூற்றுப்படி, சேவல்கள் ஒவ்வொரு நாளும் சரியாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்துவிடும்.

சேவல் சத்தத்தைக் கேட்டுத்தான் பலர் எழும்பி அன்றாட வேலைகளை ஆரம்பிப்பர். இவ்வாறு சேவலைப் போல் நாமும் அதிகாலையில் எழும்பினால், நமது வேலைகளை மிகவும் வேகமாகவும் சரியான நேரத்திலும் செய்து முடிக்க முடியும்.

சவால்களை எதிர்கொள்ளுதல்

சாணக்கிய நீதியின்படி சேவல்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பாதகமான சூழல் ஏற்படும். எனவே எந்த நேரத்திலும் அவை தன்னை காத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதேபோல் மனிதனும் அவனது பாதகமான சூழலை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.

தனித்திறன்

மனிதர்களைப் போலவே சேவல்களிடையேயும் விருப்பு, வெறுப்புகள் உள்ளன. ஆனால், இவை எந்நேரமும் சண்டையிட்டுக்கொண்டே இருக்காது. அவற்றின் குணாதிசயம் மற்றும் திறமையை நிரூபிக்கக் காத்திருக்கும்.

அனுதாபம்

தன் கூட்டத்துக்கு ஏதேனும் பிரச்சினை அல்லது ஆபத்து வருவதைக் கண்டால், உடனே அக் கூட்டத்தில் உள்ள சேவல் முன்னே சென்று நிற்கும். தனது கூட்டம் மேல் மிகுந்த அனுதாபம் கொண்டிருக்கும். அதேபோல் மனிதர்களும் இருக்க வேண்டும் என்பதையே சாணக்கிய நீதி கூறுகிறது.

உணவு

சேவலோ, கோழியோ இரண்டும் அதன் உணவை சக கோழிகளுடன் பகிர்ந்தே உண்ணும். எப்பொழுதும் ஒற்றுமையாக இருக்கும். இதேபோல் மனிதர்களும் உணவுகளை ஏனையோருடன் பகிர்ந்து உண்ண ணே்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button