இந்தியா

கர்நாடகா மண்சரிவில் சிக்கியவரின் பாதி உடல் மீட்பு: மீதி பாகத்தை தேடும் பணிகள் தீவிரம்

இந்தியா, கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், சிரூரில் கடந்த 16ஆம் திகதி பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட மண் சரிவில், மூன்று பேர் சிக்கிக் கொண்டனர்.

இதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவரை தேடும் பணிகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், மண் குவியலிலிருந்து ஒருவரின் பாதி உடல் மீட்கப்பட்டது.

இந்நிலையில் மீட்கப்பட்ட பாதி உடல் லொரி ஓட்டுநர் சரவணனுடையதா என கண்டறிவதற்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் கண்டெடுக்கப்பட்ட பாதி உடல் சரவணனுடையது என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சரவணனின் மீதி உடல் மண்ணில் புதைந்துள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த மண்சரிவில், 2 வீடுகள், ஒரு ஹோட்டல் ஆகியன மண்ணுக்கடியில் சிக்கின.

இதில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலம் நால்வரின் உடல்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *