பொய்மையும் ஊழலும் வென்றது…. உண்மையும் நேர்மையும் தோற்றது…….

பொய்மையும் ஊழலும் வென்றது உண்மையும் நேர்மையும் தோற்றது, இது தான் இன்றய காலக்கொடுமை….
சமூகத்தில் கண்ணுக்கு முன்னால் நடக்கும் “குற்றங்களை” ஒருத்தன் துணிந்து பேசினால்;
இந்த சமூகம் உடனடியாக அவனை “தூக்கிக்கொண்டாடும்”!
அதுக்குப்பிறகு குற்றவாளிகள் பணபலம், அரசியல்பலம் ,அதிகாரம் இவற்றை பயன்படுத்தி குற்றத்தை மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டியவனின் குரல் வளையை சட்டத்தின் துணை கொண்டு நசுக்குவார்கள்.
சமூகத்துக்காக குரல்கொடுத்தவன் இந்த சமூகத்தைப்பார்த்து உதவிக்கரம் நீட்டுவான்.
” கிட்ட வந்தால் உங்களையும் நசுக்குவம்” என்று குற்றவாளிகள் சமூகத்தை வெருட்டுவார்கள்.
“சட்டத்தை பயன்படுத்தி தூக்கி உள்ள போடுவம்” என்று குற்றவாளிகள் சொல்வார்கள்.
மக்கள் என்ன செய்வது என்று தெரியாது முழிப்பார்கள்.
இண்டைக்கு “சாவகச்சேரி” விடயத்தில் நடப்பதும் இதுவே!
குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர்களுக்கு எதிரான “விசாரணை” செய்ய வக்கற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் GMOA ;
குற்றம் சுமத்திய அர்ச்சுனாவையும் தென்மராட்சி மக்களையும் ஊடகங்களையும் அச்சுறுவது போல “பகிஸ்கரிப்பு” என்ற ஆயுதத்தை கையில் எடுப்பது கேவலமானது.
நியாயமான பக்கச்சார்பற்ற “நீதி விசாரணை” வேண்டும் என்றே மக்கள் கேட்கிறார்கள்.
நீதிமன்றம் மிகத்தெளிவாக அருச்சுனா வைத்தியர் விடுதியில் தங்கியிருக்கலாம் என்று குறிப்பிட்ட பின்னர்;
நீதிமன்ற கட்டளையை மதிக்காமல் அவரை உடனடியாக வெளியேற்றச்சொல்லி “பணிப்புறக்கணிப்பை” கையில் எடுப்பது நியாயமானதா?
அர்ச்சுனா வைத்தியர் விடுதியில் இருந்து கொண்டு தங்களை “அச்சுறுத்துகிறார்” என்று நினைத்தால் அந்த குற்றச்சாட்டை பொலிசில் முறைப்பாடு செய்யவேண்டியதுதானே?
உங்களை அர்ச்சுனாவின் கண்கள் இப்போதும் கண்காணிக்கிறது என்பது தானே உங்களின் உண்மையான பிரச்சினை?
குற்றம் சாட்டப்பட்ட ஒரு சில வைத்தியர்கள் தற்காலிகமாக பணி மாற்றம் அல்லது பணி நீக்கம் அல்லது தற்காலிக ஓய்வு கொடுப்பதுதான் நீதியான நடவடிக்கை!
இதை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் GMOA செய்திருக்கவேண்டும்.
ஏன் செய்யவில்லை?
திரும்ப திரும்ப “பணிப்புறக்கணிப்பு” செய்து நோயாளர்களை கொல்லுவோம் எண்டமாதிரியான வெருட்டுகள் கன நாட்களுக்கு எடுபடாது.
![]()