சீனாவில் அதிகரிக்கும் தொழில் இழப்பு; நாட்டை விட்டு வெளியேற முனையும் தொழிலாளர்கள்
கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 4.7 வீதம் வளர்ச்சியடைந்துள்ள போதிலும், சில பகுதிகளில் வேலை இழப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஷென்யாங் போன்ற நகரங்களில் இந்த நிலைமை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடினமாக பாதித்துள்ளதன் காரணமாக, அவர்கள் தொழில் தேசி நாட்டை விடுட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, வாடகை வாகனம் செலுத்துநர்கள் வெளிநாடுகளில் வேலை தேடும் போக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, சீனாவின் பெரிய மற்றும் சிறிய நகரங்களுக்கிடையேயான வருமான இடைவெளி நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வருகிறது.
சீனாவின் ரியல் எஸ்டேட் துறையின் தொடர்ச்சியான வீழ்ச்சி காரணமாக இந்த நிலைமை விரிவடைந்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், பல பிராந்திய நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையை தவிர வேறு எந்தவொரு முக்கியமான தொழிலும் இல்லை எனவும், இதுவே பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை பாதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.