காசாவில், இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 81 பேர் உயிரிழப்பு!

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 81 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம் கடந்த10 நாட்களில் காசாவில் ஐக்கிய நாடுகள் சபையினால் பாடசாலைகளில் நடத்தப்படுகின்ற 8 முகாம்கள் இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளதுடன் இந்தக் காலப்பகுதியில் இவ்வாறான 70 சதவீத பாடசாலை முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button