தேர்தலை ஒத்திவைக்க முடியாது; ரணில் அரசாங்கத்திடம் அறுதிப் பெரும்பான்மை இல்லை
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தற்போது சந்தர்ப்பங்கள் எதுவும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் தெரிவித்தார்.
நேற்று சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒவ்வொரு நபர்களை அனுப்பி நீதிமன்றில் வழக்கு பதிவு செய்தார்கள்.
அரசியல் யாப்பின் 83 (அ) சரத்து தொடர்பில் கருத்துக்கள் எழுந்தன.
83 (அ) சரத்து திருத்த நாடாளுமன்றத்தில் 2\3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது அவசியம்.
ஜனாதிபதி மூலம் 30 நாடகளுக்குள் சர்வஜன வாக்கெடுப்புக்கு அழைக்கப்பட வேண்டும்.
அதற்கு, அரசியல் யாப்பின் 22 ஆவது திருத்தத்தை முன்வைத்து நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 2\3 பெரும்பான்மை அவசியமாகும்.
22 ஆவது திருத்தத்துக்கான அரச வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு போதிய கால அவகாசம் இல்லை.
அதனை சமர்ப்பிக்கும் போது ரணில் தோல்வியடைந்திருப்பார்.” என தெரிவித்தார்.