செய்திகள்
ரொறன்டோவில் மீசாலையைச் சேர்ந்த வர்த்தகர் சுட்டுக்கொலை!

கனடாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் ரொறன்டோவில் இரு வர்த்தக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
| யாழ்ப்பாணம் – மீசாலையிலிருந்து கனடா சென்று அங்கு வியாபாரம் செய்து வந்த 29 வயதுடைய செல்வசிங்கம் சுலக்ஷன் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கனடா சென்று தொழில் தொழில் செய்யும் இடத்தில் இரு வியாபார பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஒரு தரப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் இந்த இளைஞன் பலியாகியதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கனடா ரொறன்டோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
![]()
நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்ததாகவும் பின்னர் அவரது மகன் அங்கு கல்வி கற்கும் வேளையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.