15 ஆண்களுடன் திருமணம் 30 ஆண்களுடன் காதல்; கல்யாண ராணியின் லீலைகள் அம்பலம்
தற்போது இந்தியாவின் தமிழ்நாடு முழுவதும் 17ஆண்களைத் திருமணம் செய்த ”கல்யாணராணி” என்ற இயற் பெயருடையவரின் கதை தற்போது வைரலாக மாறியுள்ளது.
இணையத்தில் தற்போது அதிகமாக விமர்சிக்கப்பட்டுவரும் இந்த கல்யாணராணி யார்? இவருக்கு ஏன் இந்த பெயர் வந்தது?
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், பெரும் பண மோசடியில் கல்யாண ராணி சத்யாவை பொலிஸார் புதுச்சேரியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
இவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக 50 ஆண்களை காதலித்தும் பலரை திருமணம் செய்தும் ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
கல்யாண ராணி என அழைக்கப்படும் சத்யா 30 வயதுடையவர் எனவும், பல ஆண்களுடன் இரகசியமான முறையில் உறவை பேணி வருவதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
பல ஆண்கனை தன்வலையில் சிக்கவைத்து பல இலட்ச ரூபா பணம், நகை என அனைத்தையும் கொள்ளையடித்த சத்யா தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.
இதன்போது கடைசியாக உறவில் இருந்த ஆணுடன் தொடர்ந்தும் தொலைபேசியில் பேசிவந்துள்ளார். இதனை அடிப்படையாக வைத்து அவரது தொலைபேசி டவரை கண்டறிந்து அதன் பின் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பின்னர் கைது செய்யதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சத்யாவின் பெயரில் காதல், திருமணம் செய்து மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், இதுவரை பெரிதாக யாரும் முன்வந்து முறைப்பாடு எதையும் பதிவு செய்யவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றளனர்.
இந்த சம்பவங்கள் அம்பலமானதைத் தொடர்ந்து பல இந்திய ஊடகங்களில் இவர் பற்றிய பல கதைகள் உலா வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது வரை சத்யா 15 பேரை திருமணம் செய்துள்ளதாகவும் 30 இற்கும் மேற்பட்டவர்களை காதலிப்பது போல் பேசி பணமோசடி செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சத்யாவால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து மறைப்பாடளிக்கும் பட்சத்தில் துரித விசாரணை மற்றம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![]()