நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது மோதிய லொறி: 6 பேர் பலி

இந்தியா, குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்திலுள்ள சிகோத்ரா கிராமத்துக்கருகில் ஆமதாபாத் நோக்கி தனியார் பஸ்ஸொன்று சென்று கொண்டிருந்தது.
இந்த வேளையில் குறித்த பஸ்ஸின் டயர் வெடித்ததனால் வீதியோரத்தில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது.
இப்போது அதே வழியில் வேகமாக வந்த லொறியொன்று பஸ்ஸின் பின்பகுதியை வேகமாக இடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இதனால் இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் தெரியவில்லை. மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
![]()