சிறைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவிக்க இருக்கும் பிரிட்டன்

பிரிட்டிஷ் சிறைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவிக்க இருப்பதாக பிரிட்டனின் புதிய தொழிற்கட்சி அரசாங்கம் ஜூலை 12ஆம் தேதியன்று அறிவித்தது.

கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி சிறைகளைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அவற்றுக்குப் போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்றும் புதிய பிரதமர் கியர் ஸ்டாமர் தலைமையின்கீழ் செயல்படும் தொழிற்கட்சி அரசு குறைகூறியது.

பிரிட்டனில் உள்ள சில சிறைச்சாலைகள் மிகவும் பழமைவாய்ந்தவை என்றும் அவை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் உள்ளனர். தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த முதல் ஒரு வாரத்திலேயே புதிய சிறைச்சாலை ஒன்றைக் கட்டி முடிக்க முடியாது. இதற்கான நீண்டகால தீர்வு அவசியம்,” என்றார் பிரதமர் ஸ்டாமர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button