பலதும் பத்தும்

கனடாவில் 5 மில்லியன் லொத்தர் சீட்டு பரிசை வென்ற பெண்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வென்றிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஜேன் டி. என்பவர் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெற்ற லொட்டோ0 குலுக்கலில் கிளாசிக் ஜாக்பாட் பரிசை வென்றதாக பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

எப்படி எதிர்வினையாற்றுவது என்றே எனக்குத் தெரியவில்லை. பணியாளர் என்னைவிட அதிக உற்சாகத்தில் இருந்தார் என ஜேன் டி. தெரிவித்துள்ளார்.

தாம் வெற்றி பெற்ற செய்தியை அறிந்த பின்னர் காருக்குத் திரும்பிச் சென்று தனது கணவரிடம் கூறியபோது, அவர் முதலில் அதை நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதலில் அவர் என்னை நம்பவில்லை.

பின்னர் வெற்றிச் சீட்டின் சரிபார்ப்பு ரசீதைக் காட்டினேன். அதில் இருந்த பூஜ்ஜியங்களை அவர் எண்ணிப் பார்த்தார் என ஜேன் கூறியுள்ளார்.

இந்த எதிர்பாராத பெரும் தொகை கிடைத்துள்ளதால், இனி தனது வாழ்க்கையில் “அதிக சுதந்திரத்துடன்” செயல்பட முடியும் என ஜேன் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் சில புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அதேவேளை, தன்னை மகிழ்விக்கும் வகையில் சொகுசுக் கப்பல் பயணத்தின்போது ஒரு தனிப்பட்ட ஸ்யூட் அறையில் தங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button