முச்சந்தி

புதிய வரி அறவீடுகள் குறித்து அரசாங்கம் அவதானம்: வரி செலுத்துவதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது

இதுவரை கவனம் செலுத்தப்படாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வரி அறவிடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இதுவரை கவனம் செலுத்தப்படாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வரி செலுத்துவதை தவிர்ப்பதற்கான சந்தர்ப்பம் எவருக்கும் வழங்கப்படவில்லை. வரி செலுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்ட காலம் இதுவரை இருந்ததில்லை.

கடந்த வருடம், வரி செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய 14 துறைகளை நாங்கள் கொண்டு வந்தோம். பெரிய அளவிலான பயிற்சி வகுப்புகள், தனியார் பாடசாலகள், தனியார் மருத்துவ சேவைகள், பொறியியல் சேவைகள், கணக்கெடுப்பு சேவைகள் போன்றன இந்த துறைகளில் உள்ளடங்குகின்றன.

பதிவுசெய்த அனைவரது வருமானம் தொடர்பில் வருமான வரித்துறை தெளிவான விசாரணை நடத்தி வருகிறது” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button