உலகம்

யார் இந்த ஈரானிய சீர்திருத்தவாதி?: மாற்றமடையுமா ஜனாதிபதி தேர்தல் களம்

ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) , அந்நாட்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று தற்போது முன்னிலையில் உள்ளார்.

சனிக்கிழமை காலை ஈரானின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இறுதி முடிவுகளின்படி, வாக்குப்பதிவு முடிந்து 12 மணி நேரத்திற்குள், மசூத் பெசெஷ்கியன் மொத்தம் எண்ணப்பட்ட 24.5 மில்லியன் வாக்குகளில் 10.4 மில்லியன் வாக்குகளைப் பெற்றார்.

பெசெஷ்கியன், முகமது கடாமியின் (2001-2005) அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக பணியாற்றினார் மற்றும் 2008 முதல் ஈரானிய பாராளுமன்றத்தில் வடமேற்கு நகரமான Tabriz ஐ பிரதிநிதித்துவப்படுத்தினார்.

பயிற்சியின் மூலம் இருதயநோய் நிபுணரான பெசெஷ்கியன் முன்பு வடக்கு ஈரானின் முன்னணி மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான Tabriz மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு தலைமை தாங்கினார்.

2013 மற்றும் 2021 ஜனாதிபதி பதவிக்கான அவரது இரண்டு தோல்வியுற்ற முயற்சிகளாக காணப்படுகின்றன.

நாட்டின் முன்னணி சீர்திருத்தக் கூட்டணியின் ஆதரவுடன், இம்முறை போட்டியிடும் ஒரே சீர்திருத்தவாத வேட்பாளராக, கடந்த சில வாரங்களாக பெசெஷ்கியன் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் கீழ் ஈரானின் வெளியுறவு அமைச்சராக இரண்டு முறை பணியாற்றிய ஜவாத் ஜரீஃப் உட்பட பல முன்னாள் சீர்திருத்தவாத அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அவரது பிரச்சாரம் வலுப்பெற்றது.

பெசெஷ்கியன் மேற்கு நாடுகள் உட்பட உலகத்துடன் இராஜதந்திர ஈடுபாட்டிற்கு ஒத்துழைப்பதாகவும், பொருளாதார மற்றும் கலாச்சார களங்களில் சீர்திருத்தங்களைத் தொடங்க உத்தேசித்திருப்பதாகவும் உறுதிகளை வழங்கியுள்ளார்.

தனது சக சீர்திருத்தவாதியான ரூஹானியின் நிர்வாகத்தின் போது ஈரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையே எட்டப்பட்ட 2015 அணுசக்தி ஒப்பந்தத்தையும் அவர் தீவிரமாக ஆதரித்தார்.

2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய ஆடைக் குறியீடு சட்டமூலத்தை அமுல்படுத்துவது குறித்த நாடாளுமன்ற சட்டமூலத்துக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் கட்டாய ஹிஜாப் (இஸ்லாமிய தலைக்கவசம்) உள்ளிட்ட பெண்களை மையமாகக் கொண்ட பிரச்சினைகள் குறித்தும் Pezeshkian குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.