பிரித்தானிய பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை அறிக்கை
பிரித்தானிய தேர்தலில் பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளதாவது;

இம்மாதம் 4 ம் திகதி பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. முன் எப்போதும் இல்லாதவாறு பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களாக பல ஈழத்தமிழர்கள் களம் இறங்குகின்றனர்.
சனநாயக ஆட்சியில் தேர்தல் என்பது மிக முக்கியமானது. மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு தளமாக உள்ளது.
நாம் வாழும் நாட்டு சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு எமது தாயகம் நோக்கிய பணியைத் தொடர வேண்டும் என்பதே எமது தேசியத் தலைவரின் கட்டளை.
இநநாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பாரிய பங்காற்றிவரும் நாம் அரசியலிலும் மும்முரமாக ஈடுபடவேண்டிய அவசியம் உள்ளது .
ஆகவே நாம் எமக்குக் கிடைத்துள்ள வாக்குரிமையை மிகச்சரியான முறையில் வெளிப்படுத்தி எமக்கான அரசியலை வீச்சுடன் முன்னெடுக்க வேண்டும்.
இம்மாதம் 4ம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 10 மணிவரை எங்கள் வாக்குகளைச் செலுத்தலாம். சிரமம் பாராது காலத்தின் தேவையறிந்து எமது கடமையைச் செய்ய முன்வருவோமாக!