உலகம்

உயிருக்கே ஆபத்தான முத்தக் காய்ச்சல் பற்றி தெரியுமா?

வாயோடு வாயாக எச்சில் மூலம் பரவி உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் முத்த நோய் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த நெவி மெக்ரெவி என்ற 22 வயது பெண் ஒருவர் பட்டப்படிப்பை முடித்து டிகிரி வாங்கியதைக் கொண்டாட தனது தோழிகளுடன் பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தற்செயலாக சந்தித்த வேற்று நபருக்கு நெவி வாயோடு வாய் முத்தம் கொடுத்துள்ளார்.

அடுத்த நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே மருத்துமனைக்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது GLANDULAR FEVER எனப்படும் சுரப்பிக் காய்ச்சல் அவரைத் தாக்கியுள்ளது. உடலின் சுரப்பிகள் வீங்கி அதீத வேர்வை ஏற்பட்டு தொடர்ச்சியாக வாந்தி எடுத்து தற்போது நடக்கக்கூட முடியாத நிலையில் நெவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சுரப்பி நோயானது எப்ஸ்டைன் பார் [Epstein barr virus -EPV] என்ற வைரசால் ஏற்படுவது ஆகும். இந்த வைரஸ் எச்சில் மூலம் பரவக்கூடிய தன்மை உடையது. முக்கியமாக ஒருவரது எச்சில் மற்றவருக்கு மிகவும் தொடர்புபடும் முத்தத்தால் இந்த நோய் அதிகமாக பரவுவதால் இதை முத்தக் காய்ச்சல் [Kissing fever] என்று அழைக்கின்றனர். இது இளம் வயதினரிடமே அதிகமாக பரவி வருகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இல்லாத போது இந்த நோய் ஏற்படுகிறது . இந்த நோயினால் ஹெப்பாடிட்டிஸ், கல்லீரல் செயலிழல்ப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் உயிர்கொல்லியாகவும் மாறக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.