இஸ்ரேல் தாக்குதலில் 20 ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள 116 பணய கைதிகளில் 30 பேர் உயிரிழந்து விட்டனர் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், காசாவின் வடக்கே ஷெஜாயா நகரில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், அவர்களில் பலர் கொல்லப்பட்டனர்.தெற்கு காசாவின் ரபா நகரில், பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வீசிய பயங்கரவாதியை ராணுவ வீரர்கள் வான்வழி தாக்குதல் நடத்தி கொன்றனர்.
இதேபோன்று மத்திய காசா பகுதியில் நெட்ஜரீம் என்ற இடத்தில், வீரர்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை ஆளில்லா விமானம் உதவியுடன் வீரர்கள் சுட்டு கொன்றனர். மொத்தம் 20 பயங்கரவாதிகள் வரை படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.