ஆடம்பரத்தின் உச்சத்தில் ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழ்: திறந்ததும் மங்கள இசை
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்டுக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.
இவர்களின் திருமணத்துக்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் பல திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஒன்று கூட மூன்று நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் இவர்கள் திருமண நாள் நெருங்கி வருகின்ற நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தை கலக்கி வருகிறது.
குறித்த அழைப்பிதலானது, கோவிலை ஒத்த அமைப்புடைய ஒரு பெட்டிக்குள் அதனை திறந்ததும் உள்ளே விபரங்கள் அடங்க தெய்வீக உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பிதழை திறந்ததும் மங்கள இசை ஒலிக்கிறது.
இந்த திருமண அழைப்பிதழை ஆடம்பரத்தின் உச்சம் எனக் கூறினாலும் தவறில்லை.
![]()