சஜித்  5 நாள் விஜயமாக யாழ். செல்கிறார்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 13 ஆம் திகதி வியாழக்கிழமை வரை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பாரதி வித்தியாலயம், யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரி, நல்லூர் சென். பெனடிக்ற் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை எதிர்க்கட்சித் தலைவ வழங்குவார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (10) பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தொகுதிகளுக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, அளவெட்டி அருணோதயா கல்லூரிக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குவார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர், நெடுந்தீவு மகாவித்தியாலம், சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, இளவாலை புனித. ஹென்றியரசர் கல்லூரி களுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குவார்.

எதிர்வரும் புதன் (12) கோப்பாய் தொகுதிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி, காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரிக்கு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார்.

மேலும் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், பஸ் ஒன்றை அன்பளிப்பு செய்யவுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை (13) சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி் இரணைதீவு றோ. க. த. க ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்குவார்.

பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன மற்றும் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோருடன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பல சமூக, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது விஜயத்தின்போது, அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button