உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞர்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு..!

உடல் பருமன் சிகிச்சையால் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வ் எளியாகியுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரனுக்கு உடல் பருமனை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றதாகவும், சிகிச்சை பெற்ற போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என  உயிரிழந்த இளைஞரின் உறவினர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

மேலும் இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *