மர்மமான முறையில் கர்ப்பமான சிறுமி: அதிர்ச்சியில் உறைந்த வைத்தியர்கள்!

ஹெட்டிபொல பிரதேசத்தில்13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்ட போது அது குறித்து அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை அத்தோடு சிறுமி நிரபராதி என அவரது பெற்றோர் காவல்துறையினரிடம் பலமுறை கூறியுள்ளனர்.

இதையடுத்து சிறுமி குளியாப்பிட்டிய சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமிக்கு உடல் ரீதியான எந்தவொரு தொடுகையிலும் ஈடுபட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் காவல்துறையினர் நேற்று விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *