கனடா தேர்தலில் இந்திய தலையீடு இல்லை”: சந்தேகம் தீர்ந்தது!
கனடாவில் நடந்த தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா குற்றம் சாட்டியது. இதனால், இந்தியா கனடா இடையிலான உறவு மோசமடைந்தது. கடந்த பிப்., மாதம் சீனா, ரஷ்யா உடன் இணைந்து இந்தியாவை ‛வெளிநாட்டு அச்சுறுத்தல்’ என கனடா உளவுத்துறை குற்றம் சாட்ட, உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவையின்(சிஎஸ்ஐஎஸ்), 2021ம் ஆண்டின் தேர்தலின் போது காலிஸ்தான் இயக்கம், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு அனுதாபம் கொண்ட, இந்திய வம்சாவளி வாக்காளர்கள் அதிகம் இருக்கும் குறிப்பிட்ட மாவட்டங்களை இந்திய அரசு குறிவைத்து இருக்கிறது. தேர்தலில் இந்தியாவின் தலையீடு உள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
தலையீடு இல்லை
தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, கனடா பிரதமர் ட்ரூடோ ஒரு குழு அமைத்தார். தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், கனடாவில் நடந்த தேர்தலில் இந்தியாவின் தலையீடு இல்லை என தெரியவந்துள்ளது.
![]()