பிரபல தனியார் நிறுவனத்தில் சமோசாவில் ஆணுறை அடைத்து விற்பனை- இருவர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் கேண்டீனில் சமோசாவில் ஆணுறை, கற்கள், புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் அடைத்து விற்பனை செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 27-ம் தேதி இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை கேண்டீன் ஊழியர்களான பெரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின்படி, ஒரு தொழிலதிபர் இந்த கொடூரமான செயலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

குற்றம்சாட்டப்படும் தொழிலதிபரின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதை அடுத்து, நிறுவனத்துடனான கேட்டரிங் ஒப்பந்தத்தை நாசப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *