இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை: அமெரிக்கா அறிவுரை

இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை தணித்து, பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் ” என அமெரிக்கா கூறியுள்ளது.

பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களை இந்திய உளவுத்துறையினர் பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம்சாட்டியதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டது. ‛‛ இது தவறானது மற்றும் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படும் பொய் பிரசாரம்” என நமது வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மேத்யூ மில்லர் கூறுகையில், ‛‛ இந்த விவகாரம் குறித்து மீடியா தகவல்களை பார்த்தோம். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எங்களிடம் எந்த கருத்தும் இல்லை. நாங்கள் தலையிடவும் விரும்பவில்லை. பதற்றத்தை தணிக்கவும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் ஊக்கப்படுத்துகிறோம்”. இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *