இந்தியா
ஜனநாயகம் பணநாயகமாகி விட்டது: சீமான்

வேலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அண்ணாமலை சொன்னார், ரூ.4 கோடி பிடிபட்டுள்ளது.
* ஜனநாயகம் வளர, பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு 10 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
* பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் போட்டியிட 2 முறை தடை விதித்தால் இந்த முறை நின்று விடும்.
* நம் முன்னோர்கள் போராடி பெற்ற சுதந்திரம், ஜனநாயகம் பணநாயகமாகி விட்டது. அதனால்தான் எந்த கட்சியுடனும் கூட்டணி சேரவில்லை.
* ஒரு பைசா பணம் கொடுக்காமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நேர்மையான வேட்பாளர்களும் இருக்கிறார்கள் என்று கூறினார்.
![]()