“விசித்திர விலங்கு- வௌவால்” …. கே.ஆர்.இரமேஷ்.முதுகலை விலங்கியல் ஆசிரியர்,

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். கடைசி பெஞ்சில் மாணவர்களோடு அமர்ந்து
கொண்டார். மாணவர்கள் உற்சாகமாக கரவொலி எழுப்பி அன்றைய தின கருத்தரங்கிற்கு பேசுவதற்காக சக நண்பர்களான சந்திரனையும், ராமனையும் அழைத்தனர். இருவரும் தயங்கியபடி முன்னால் வந்து நின்றனர். ராமன் தான் கொண்டு வந்த படத்தை விரித்து காண்பித்தான். அனைவரும் உற்று நோக்கினர். சந்திரன் பேச ஆரம்பித்தான், இது வௌவால், நரியின் முகத்தோற்றத்தையும் மூஞ்சுறுவின் உருவத்தையும் ஒத்து இருக்கும்.ச சுமார் 30 ஆண்டுகள் உயிர்வாழும். பறக்கும் திறன் படைத்த ஒரே பாலூட்டியினம். இதனை சிலர்
பறக்கும் நரி என்பர். பறக்கும் போது உடல் எடையை இலகுவாக்க சாப்பிட்ட உணவை விரைவாக ஜீரணிக்கும். கழிவுகளை அடிக்கடி வெளியேற்றிக் கொண்டே இருக்கும் என்றான்.
ராமன் குறுக்கிட்டான்.எங்க ஊர்ல ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று பார்த்தோம். கட்டிட மேற்கூரையின் அடிப்பகுதியை வௌவால்கள் தனது கால்களால் இறுகப்பற்றிக் கொண்டு தலைகீழாக தொங்கிக் கொண்டு இருந்தன. கூட்டமாக காணப்படும் இவைகள் பகலில் தூங்கி ஓய்வெடுக்கும். உலகமே உறங்கி ஓய்வெடுக்கும் ராத்திரியில் உணவு உள்ளிட்ட தனது தேவைகளுக்காக வெளில வரும்.நாள் பூரா தலைகீழா தொங்கினாலும் ரெக்கையால் தனது உடலை மூடி கொள்வதால் சோர்வடையாதாம். பகல் பொழுதில் வெளில வந்தா வல்லூறு,ப பூனை, பாம்பு போன்ற மிருகங்களுக்கு இரையாக நேரிட்டு வௌவால் இனமே அழிந்து போகும் அபாயம் ஏற்படுமாம்.. அதனாலதான் வௌவால்களை பாதுகாக்க மறைந்து வாழும் உயிரினமாக இயற்கை படைத்துள்ளது என்று பெரியவர் ஒருத்தர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது என்றான்.
இரவில் அலையும் சாத்தான்.
ஒரு மாணவன் எழுந்தான். வௌவால்கள் வீட்டிற்குள் வந்தால் அபச குணம்னு சொல்றாங்களே உண்மையா என்றான். சந்திரன் தொடர்ந்தான். கருத்தமேனியோடு அறுவெறுக்கத்தக்க தோற்றத்துடன் நோயுண்டாக்கும் வைரஸ்களை தன்னுள் கொண்டு ராத்திரியில் அலைந்து திரிவதால் இரவில் அலையும் சாத்தான் என்ற பெயருண்டு. மற்றபடி அபசகுணம் என்பது மூடநம்பிக்கை என்றான். மற்றொரு மாணவன் ராத்திரியில இதுகளுக்கு கண்ணு எப்படி தெரியும்..னான். டார்ச் லைட்ட கைல கொண்டு போகுமாக்கும் என்றான் யாரோ ஒருவன். சிரிப்பொலி வகுப்பறை முழுவதும் பரவியது. அதுவரை பின்னால் அமர்ந்திருந்த ஆசிரியர் முன்னால் தோன்றி, மாணவர்கள் ராமனையும் சந்திரனை பாராட்டியதோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
இரவில் இயங்கும் வௌவால்கள் கண்ணொளியை விட குரலொலியை பெரிதும் நம்பி வாழும்.அதாவது மனிதனால் கேட்க இயலாத (மீயோலி) சிறு சிறு துடிப்பலைகளாக குரல் எழுப்பி அவை எதிரில் தென்படும் பொருட்களின்மீது பட்டு எதிரொலிப்பதை (கால இடைவெளி, தூர இடைவெளி அடிப்படையில்) கேட்டுணர்ந்து பறந்து செல்வது இதன் தனிச்சிறப்பு.
வௌவால்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயல்நுட்பம் தான் ராணுவம், மருத்துவம், தொழில்துறையில் தொலைகண்டுணர்வியாக (ரேடார் கருவியாக) பயன்படுத்தப்படுகிறது.
சூழ்நிலைமண்டலத்துக்கு வௌவால்கள் அவசியமா?
வௌவால்களை மூன்று வகையாக பிரித்துள்ளனர். முதல் வகை உருவத்தில் பெரியது. பழங்களையும், பூக்களையும் சாப்பிட்டு, விதையை தூவுதல், மகரந்த சேர்க்கை என தாவர பெருக்கத்திற்கு உதவுகிறது.
இரண்டாம் வகை உருவத்தில் சிறியது. வண்டு, வெட்டுக்கிளி என விவசாயத்திற்கு தீங்கு செய்யும் பூச்சி இனங்களை, தனது உணவுக்காக வேட்டையாடி அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. ஒரு வௌவால் சுமார் 600முதல் 1000 கொசுக்களை கொன்றழிக்கும். அது மட்டுமல்லாது வாய் வழியாகவே உணவு உண்டு வாய் வழியாகவே கழிவை வெளியேற்றும் வௌவாலின் (மாணவர்கள் முகம் சுழிப்பதைக் காண முடிந்தது. கழிவுகள் புரதச்சத்து மிகுந்த இயற்கை உரம்.
மூன்றாம் வகை ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் இரத்த காட்டேரிகள். நம்ம நாட்டுல கிடையாது.பிற உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்கும் இந்த வௌவால்களின் உடலிலிருந்து இரத்தம் உறைதலில் தடைசெய்யும் பொருளை பிரித்தெடுத்து மனிதர்களின் இதய நோய்க்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறாக வௌவால்கள் சூழ்நிலை மண்டலத்திற்கு உதவுகிறது.
மறைந்து வாழும் உயிரினம்:
பூமி உயிர்கோளமாக இருக்க ஒவ்வொரு உயிரினமும் அவசியமென்பதால்தான் வௌவால் இனம் அழியாமல் பாதுகாக்க மாறுபட்ட இயல்புகளோடு மறைந்து வாழும் உயிரினமாக இயற்கை படைத்துள்ளது. அதுபோல மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி திறமைகளோடு படைக்கப்பட்டுள்ளீர்கள். (எல்லோருக்கும் ஒன்று போல் திறமை இருக்காது). அத்திறன்களை வளர்த்து இச்சமூகத்திற்கு கடமையாற்றிட வேண்டும் என்பதே விசித்திர வௌவால்கள் உணர்த்தும் பாடமாகும் என்று ஆசிரியர் நிறைவு செய்தார்.
கே.ஆர்.இரமேஷ்,
முதுகலை விலங்கியல் ஆசிரியர்,
![]()
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் இன்னும் பல பயனுள்ள பதிவுகளை எதிர்பார்க்கிறேன் நனறி
உங்கள் சக மாணவனாய் பெருமிதம் கொள்கிறேன்..!
நீஙகள் மென்மேலும் வளர்ந்து நல் மாணக்கர்ளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், சிறந்த ஆசிரியர்களையும் உருவாக்க வேண்டும்..?
வௌவால் பற்றிய முழு தகவல் களஞ்சியமாகவும், அழகான இயல்பான கதை வடிவம் கொண்டும் படைப்பு சிறப்பாக உள்ளது…
இது போன்ற சிறப்பான படைப்புகள் வெளிவர வாழ்த்துக்களும் வணக்கங்களும்…
🙏🙏🙏🙏🙏
மிகச்சிறப்பான கட்டுரை இறுதியில் உயிர்கள் பற்றிய உண்மைகளோடு உணர்வுகளையும் உணர்த்திய விதம் அருமை
girisumisrinivasan@gmail.com
அரிய தகவல்கள் 👌
சாதாரண நடையில் தெரிவித்த பாங்கு சூப்பர் 👍
கரும்பலகை உங்களிடம் வெரும் பலகையாக இருந்தது இல்லை நண்பா..
உலகில் இரண்டு புனிதமான
இடங்கள் உண்டு.. ஒன்று
தாயின் கருவறை.. இன்னொன்று நல்ல ஆசிரியரின் வகுப்பறை
தாயின் கருவறையில் ஒருவன்
உயிரைப் பெறுகிறான்.. ஆசிரியரின்
வகுப்பறையில் அவன்
அறிவைப் பெறுகிறான்..
கல்வியோடு ஒழுக்கம்,பண்பு,
தன்னம்பிக்கை, ஊக்கம்,
விடாமுயற்சி ஆகியவற்றை
மாணவர்களுக்கு ஊட்டி அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியாகும்
என்னோடு பயின்று நல்ல ஆசிரியர் விருது பெற்று இன்று *வானளவு உயர்ந்திருக்கும்* எனது நண்பனுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்..
வவ்வால்களை பற்றி இவ்வளவு தெளிவாகவும் அனைவரும் சிந்திக்க கூடிய வகையிலும் மாணவர்களுக்கு கற்றுத் தந்த நண்பனுக்கு வாழ்த்துக்கள்…
நானும் ஒரு மாணவனாக இருந்து அதில் நீங்கள் குறிப்பிட்ட பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் நன்றி நண்பா..
கற்றுத்தரும் ஆசிரியராக நண்பன் கிடைத்ததற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்…
மிகச் சிறந்த தகவல் வௌவால்கள் பற்றிய அருமையான புதிய செய்திகள் வாழ்த்துக்கள்
அறிவியல் ஆசிரியர் அறிவியல் பாடத்தோடு நீதியையும் போதித்தது மிகவும் அருமை. தங்களின் பன்முகத்திறமை, இப்பாடக் கற்பித்தலின் மூலம் வெளிப்படுகிறது. வாழ்த்துகள் ஆசிரியரே.
வவ்வால்கள் பற்றிய விந்தையான தகவல்களை அறிந்து வியந்து போனேன். மிகவும் பயனுள்ள கட்டுரை. உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .உங்கள் ஆசிரியர் பணி சிறக்க மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
வவ்வால்கள் பற்றிய விந்தையான தகவல்களை அறிந்து வியந்து போனேன் . மிகவும் பயனுள்ள கட்டுரை !! இந்த கட்டுரையை மாணவர் வழி நின்று நீங்கள் விளக்கிய விதம் அருமை !உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்… உங்கள் ஆசிரியர் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சிறப்பான கட்டுரை. இதுபோன்று நிறைய தகவல்களை தொடர்ந்து எழுத மனசார வாழ்த்துகிறேன்.
மிகவும் அருமையான கட்டுரை. மாணவர்களோடு கலந்து கட்டுரை அமைந்தது மிகவும் சிறப்பு. பல்வேறு புதிய தகவல்கள் இக்கட்டுரின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்று தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் சிறப்பான தகவல் ஐயா 👌🤝👍👍
Extra ordinary message sir
Expecting much more from you as valuable for us