கவிதைகள்

“நேற்று ஊர் சென்ற பேர்த்தி”…. கவிதை …. முல்லைஅமுதன்.

நேற்று ஊர் சென்ற பேர்த்திபழைய புகப்படங்களை கிளறிக்கொண்டிருந்தாள்.அவள் பாட்டி கொடுத்த தேநீர் ஆறிப்பொனது.வயலுக்குசென்று வந்த சித்தப்பா மண்வெட்டியை கொல்லையில் வைத்துவுட்டுத் தலைத்துண்டை உதறிக்கொண்டு ‘யாரது..இந்தக்குட்டி..நம்ம செலமோ?அருகில் அமர்ந்தார்.அவளிடமிருந்து வந்த புன்னகை மட்டுமே கிடைத்தது.பேர்த்தி வந்திருக்கிறாள் என்றுஉறவுகள் வீட்டை நிறைத்திருந்தனர்.அவளின் அம்மா எல்லா உறவுக்காரர்களுக்கும் பரிசு கொடுத்தாள்.பேர்த்தி கடையாகசீட்டுக்கட்டு போல ஒன்றை எடுத்துப் பிரித்துஅதனுள் ஒன்றை நெஞ்சோடு அணைத்தபடிபுன்னகைத்தாள்.சென்ற ஒரு நாளில் காலமாகிப்போனஎனது புகைப்படம்..

முல்லைஅமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *