கட்டுரைகள்

கங்காரு தேசம்…..! ஶ்ரீரஞ்சனி

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும், அழகும்செழிப்பும் மிக்க இலங்கையில் பிறந்த எங்களை, அந்த நாட்டில்வாழவிடாமல் துரத்திய விடயங்கள் எங்களுக்கு ஆற்றொணாவேதனைகளையும் இழப்புகளையும் விளைவாக்கியிருந்தாலும்கூட,பல்வேறு நன்மைகளையும் செய்திருக்கின்றன என்பதை எவரும்மறுக்கமுடியாது.

உதாரணத்துக்கு, புலம்பெயர்ந்த நாடுகளில் எங்களுக்குக்கிடைத்திருக்கும் குடியுரிமை நாங்கள் வாழ்கின்ற நாடுகளுக்குள்மட்டுமன்றி, வெளியேயும் எங்களுக்குப் பலதரப்பட்ட அனுகூலங்களைஅள்ளித்தந்திருக்கிறது. அவ்வகையில் உலகெங்கும்சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்வசதியைப் பயன்படுத்தி ஆசியாவிலும் அமெரிக்காவிலும்ஐரோப்பாவிலும் உள்ள சில நாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன்.

ஆனால், ஆபிரிக்காவுக்கோ அல்லது அவுஸ்ரேலியாவுக்கோ இதுவரைசென்றிருக்கவில்லை.பல்வகையுள்ள விலங்குகளை அவற்றின் வாழிடங்களிலேயேபார்த்துக் குதூகலிக்கலாமென்பதற்காக ஒரு தடவை ஆபிரிக்காபோகவேண்டுமென்ற அவா இருந்தாலும், அவுஸ்ரேலியாவுக்குப்போகவேண்டுமென்பதுதான் என் நீண்டநாள் கனவாக இருந்தது.

என்உற்ற சினேகிதிகள், சகமாணவர்கள், அயலவர்கள் என மனதுக்குநெருக்கமான பலர் வாழும் அவுஸ்ரேலியாவில்தான் சொந்தச்சகோதரங்களைவிட மேலான சகோதர வாஞ்சையுடன் பழகும்முருகபூபதி அண்ணாவும் வாழ்கிறார் என்பதும் அதன்மேலானமோகத்துக்கும் தாபத்துக்கும் காரணமெனலாம்.

கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் நான்கற்பித்துக்கொண்டிருந்த காலங்களில், சில்லையூர் செல்வராஜன்,கமலினி செல்வராஜன், யோகா பாலச்சந்திரன், ராஐ ஶ்ரீகாந்தன்,சோமகாந்தன், பத்மா சோமகாந்தன் எனப் பல இலக்கியக்காரரின்அறிமுகம் கிடைத்திருந்தது.

அவ்வகையில் அறிமுகமாகியிருந்தமுருகபூபதி அண்ணாவுடனான உறவு அவர் என் அப்பாவின் மாணவர்என்ற முறையில் இன்னும் சற்று நெருங்கியதாகவே இருந்தது.பின்னர் விதி எங்களில் பலரை எங்கெல்லோமே விரட்டியதில்,எண்பதுகளின் இறுதிப்பகுதியில் வளர்த்திருந்த அந்த உறவை மீளவும்புதுப்பிக்கும் வாய்ப்பு 2007இலேயே எனக்குக் கிடைத்திருந்தது.

ரொறன்ரோவிலிருந்து அவர் புறப்படும்போது, அவுஸ்ரேலியாவில்சந்திப்போம் என நான் கதையோடு கதையாக அன்று கூறியது, 15வருடங்களின் பின் இவ்வருடம் சாத்தியமாகியிருந்தது.

தங்கையின் மகளின் பட்டமளிப்பில் கலந்துகொள்வதற்காகலண்டனுக்குச் சென்றதால், அங்கிருந்தே நாட்டின் பெயரும் அதுஅமைந்திருக்கின்ற கண்டத்தின் பெயரும் ஒன்றாக இருக்கும் சிறப்பைக்கொண்டிருக்கும் அவுஸ்ரேலியாவுக்குப் பயணமாகியிருந்தேன். Heathrowவிமானநிலையத்திலிருந்து நான் இருந்த இடம் தூரத்திலிருந்ததாலும்,காலைநேரப் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகவும்,அதிகாலை 5½ மணிக்கே நான் அங்கிருந்து புறப்பட்டு விட்டேன்.

எனது Uber வாகனச் சாரதியாக வந்திருந்த பஞ்சாப் பிரதேசத்தைச்சேர்ந்த இளைஞர் பயணத்தின்போது பேசிக்கொண்டே வந்தார். தொழில்தேடித் தான் லண்டனுக்கு வந்ததாகவும், தற்போது தன்னுடையஇரண்டு வயது மகளுடன் அதிகநேரத்தைச் செலவிடுவதற்காகஅதிகாலையிலும் இரவிலும் மட்டும் Uber ஓட்டுவதைத்தெரிவுசெய்திருப்பதாகவும் கூறினார். அந்தத் தந்தையின் அன்பும்அர்ப்பணிப்பும் என் மனதைத் தொட்டன. ரொறன்ரோவுக்குவந்திருந்தபோது, நானும் ஒருவகையில் இதேபோலத்தான் இருந்தேன்.

பிள்ளைகளை அரைநித்திரையில் daycareஇல் கொண்டுபோய்விட்டுவிட்டு, காலில் சில்லுப்பூட்டியதுபோல ஓடிக்கொண்டிருக்கும்வாழ்க்கையை விரும்பாததால், படிப்புக்கேற்ற ஒரு பயிற்சியைப்பெற்று நிரந்தரமானதொரு வேலையைத் தேடிக்கொள்ளவேண்டுமென்ற என் கனவை மனதில் ஆழமாகவே புதைத்திருந்தேன்.அதனால், அந்தக் காலகட்டத்தில் பொருளாதரக் கஷ்டங்களைஎதிர்நோக்க வேண்டியிருந்தபோதும் மனதுக்கு நிம்மதி இருந்ததுஉண்மைதான்.

முடிவில், விமானநிலையத்துக்கு ஏழு மணிக்கு முன்பேசென்றுவிட்டேன், நான் பதிவுசெய்திருந்த Malaysia Airlines 7:30 மணிக்கேசேவைகளை ஆரம்பிக்கும் என்றிருந்தது. சரி, எல்லாமே எட்டுமணிக்கிடையில் முடிந்துவிடும், பதினொரு மணி விமானத்துக்கானநீண்ட நேரக் காத்திருப்பின்போது மண்டூர் அசோகாவின் எழுதப்படாதகவிதைகளை வாசிக்கலாமென நினைத்துக் கொண்டேன்.

மூன்றாவது நபராக check-in பண்ணச்சென்ற என்னிடம், விசாஎங்கே என்று கேட்ட அங்கிருந்த பணிப்பெண்ணுக்கு, நான் ஒருகனேடியன், எனக்கு விசா தேவையில்லையெனப் பெருமையுடன்பதிலளித்தேன். அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கான அனுமதி கேட்டுகனேடியரும் விண்ணப்பிக்க வேண்டியிருக்குமென நான்நினைக்கவேயில்லை. பயணத்துக்கான அங்கீகாரம் உனக்கும்தேவையெனச் சொன்ன அந்தப் பெண் விண்ணப்பிப்பதற்கானவலைத்தள முகவரியைத் தந்தார். வெட்கமும் பதற்றமும் என்னைஆக்கிரமித்துக் கொண்டன.

கவுண்டரிலிருந்து அப்பால் தள்ளிநின்று விண்ணப்பிக்கமுயன்றபோதுதான் விசா தேவையற்ற நாடுகளிலிருந்து போவோர்பற்றியும் அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்குத் தெரியவேண்டுமாம் என்பதுவிளங்கியது. கடவுச்சீட்டைப் படமெடுப்பது, தங்கியிருக்கும் முகவரிகொடுப்பது போன்ற பல வேலைகளை எனது தொலைபேசியின்சின்னத் திரையில் மிகச் சிரமப்பட்டுச் செய்யவேண்டியிருந்தது.

முடிவில், அங்கீகாரம் கிடைக்க 24 மணித்தியாலம்வரைஎடுக்கலாமெனப் பதில் வந்தது. பீதி என்னைப் பற்றிக்கொண்டது.அந்தச் செய்தியை அந்தப் பெண்ணுடன் பகிர்ந்தபோது, நேரத்துக்கு அதுகிடைக்காவிடில் நீ போகமுடியாதென எந்தவித உணர்ச்சியுமில்லாமல்கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டார் அவர்.

இப்படி எத்தனைபேரை அவர் சந்தித்திருப்பார். அவருக்கு இது நாளாந்தநிகழ்வு, ஆனால் எனக்கோ என்ன செய்வதெனத் தெரியவில்லை.இப்படியான சந்தர்ப்பங்களில் பொதுவாகப் பிள்ளைகளைத்தான்அழைப்பதுண்டு. ஆனால் ரொறன்ரோவில் அது அதிகாலை மூன்றுமணி என்பதால் அதையும் செய்யமுடியவில்லை. முடிவில்மின்னஞ்சல் வந்திருக்கிறது என்பதை அறிவிக்கும் ஒலி

தொலைபேசியில் கேட்டபோதே என் இதயம் ஒழுங்காகத் துடிக்கத்தொடங்கியது.ஒருமாதிரி எல்லாம் சரி என விமானம் ஏறுமிடத்துக்குப்போனால், விமானத்தில் ஏதோ பிரச்சினையாம், 3 மணி நேரம்தாமதமாகும் என்றார்கள். இதென்னடா எல்லாம் குழப்பமாகஇருக்கிறது. இனி கோலாலம்பூரிலிருந்து மெல்பேர்ன் புறப்படும்விமானத்தைத் தவறவிட்டிடுவேனே, என்ன நடக்கும் என அந்தவிமானப் பணிப்பெண்களைக் கேட்டேன்.

அதற்கு அவர்கள் அதை நீஅங்கு போய்த்தான் பார்க்கவேண்டுமென்றனர். எதுவும்செய்யமுடியாமை எனக்கு மலேசியன் ஏயர் லைனில்கோபத்தைத்தான் ஏற்படுத்தியது. இருந்தாலும் விமானம் பறக்கும்போதுபிரச்சினை ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்குமென மனதைஆறுதல்படுத்திக் கொண்டேன்.

சினேகிதி பாமினி தன் கணவருடன் விமானநிலையம் வந்துஎன்னை அழைத்துச்செல்வதாக இருந்தது. அது ஒரு கிழமை நாள்என்பதால் அவர்களுக்குச் சிரமம் கொடுக்கக்கூடாதென்பதற்காக இரவு8:15 அளவில் அங்கு போய்ச்சேரக்கூடியதாக ரிக்கற் எடுத்திருந்தேன்.

இனி எப்படி அவர்களைச் சாமத்தில் காத்திருக்கச் சொல்வது எனக்குழப்பமாக இருந்தால் பாமினியை அழைத்து எனக்காகக்காத்திராதீர்கள். நேரத்துடன் வந்தால் நான் அறிவிக்கிறேன் என்றேன்.ஒரு பிரச்சினையுமில்லை, ஒண்டுக்கும் யோசிக்காதேயுங்கோ என அவஎனக்குச் சொன்னாலும் எனக்கு அமைதியில்லாமல் இருந்தது. அந்தவிமானத்துக்குக் காத்திருந்த இன்னொரு மெல்பேர்ன் வாசி, அந்தவசதியை விட்டுவிடாதேயுங்கோ, பிறகு இரவில் கஷ்டப்படுவீர்களெனஎனக்குப் பாவம் பார்த்தார்.

பிள்ளைகள் எழும்பியதும் என் செய்திகளைப் பார்த்துவிட்டுஅழைத்தார்கள். என் விமானத்துக்கான இணைப்பைத் தவறவிட்டால்அடுத்த விமானம் 12 மணி நேரத்துக்குப் பின்பாகவே இருக்கும்.ஒன்றில் உங்களுக்குக் ஹோட்டல் வசதி செய்துதருவார்கள், அல்லதுநீங்கள் மலேசியாவைப் பார்க்கலாம் என ஆறுதல் சொன்னார்கள்.

அவுஸ்ரேலியாவுக்கு வருகிறேன் எனச் சொன்ன நேரத்திலிருந்துஅதுபற்றி அடிக்கடி அதுபற்றிப் பேசிக்கொண்டிருந்த பூபதி அண்ணாவும்நிலைமைகள் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். பாஸ்போட் கவனம்,செல்போனை மறந்துபோய் எங்காவது விட்டுவிடாதேயுங்கோ எனஅக்கறையாக மீளவும் ஞாபகப்படுத்தினார். ஏதாவது மருந்துஎடுக்கிறனீங்கள் எண்டால் அதையும் கொண்டுவாறியள் தானே எனமீளவும் உறுதிப்படுத்திக்கொண்டார்.

முடிவில் அந்த இணைப்பு விமானத்தை எங்களுக்காககோலாலம்பூரில் ஒரு மணி நேரம் நிறுத்தி வைத்திருந்தார்கள்.வழமையான நடைமுறைகளைத் தவிர்த்து எங்களை விசேடபாதையால் கூட்டிச் சென்று அந்த விமானத்தில் ஏற்றிவிட்டார்கள்.அதனால் 8:15க்குச் செல்ல வேண்டிய நான் 9:30க்குப் போய்ச்சேர்ந்துவிட்டேன். அதனால் மிகவும் ஆறுதலாக இருந்தது.

இப்படியாக அவுஸ்ரேலியாவுக்குச் செல்வதில் தடங்கல்களைஅனுபவித்தாலும், மெல்பேர்ன் விமானநிலையத்திலிருந்துபாமினியுடன் அவ வீட்டுக்குச் சென்ற நேரத்திலிருந்துசிட்னியிலிலுள்ள விஜி வீட்டிலிருந்து நான் புறப்படும்வரை, என்வீட்டில் நானில்லை என்பதை உணராதளவுக்கு வசதியாகவும்மகிழ்ச்சியாகவும் நானிருந்தேன்.

– தொடரும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *