கட்டுரைகள்

உயர்சாதி குழந்தைகளுக்காக முலைப்பாலூட்ட வற்புறுத்தப்பட்ட தாழ்ந்தசாதி பெண்கள்!….. 2…. சங்கர சுப்பிரமணியன்.

உடல்மூலமான துன்பம்மும் பாலியல் மூலமும் பேச்சின் மூலமும் மனதைப் பாதிக்கும்படியான சொற்களாலும் மற்றும் மறுத்தால் குடும்பத்தினர் மேற்கொள்ள இருக்கும் பிரச்சனைகளையும் எண்ணி பெண்கள் மறுப்பேதும் சொல்லாது கீழ்படிந்தார்கள்.சாதிய அடக்குமுறையை எதிர்த்தவர்கள் திரும்பத்திரும்ப கொடிய பின்விளைவுகளை எதிர்கொண்டார்கள். 2006ல் ஒரு குடும்பம் எதிர்ப்பைத் தெரிவித்ததற்காக மகாராஷ்டிராவிலுள்ள கைர்லஞ்சி என்ற கிராமத்தில் மிகவும் ஆதிக்கமுடைய சாதியினர் தாழ்ந்தசாதியைச் சார்ந்த தாய், மகள், மற்றும் மகன்களை நிர்வாணமாக நடக்க விட்டதலோடில்லாமல் கற்பழித்து கொன்றிருக்கிறார்கள்.கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பது வயது பிற்படுத்தப்பட்ட இன சிறுவன் ஒருவனை அவன் ஆசிரியர்களின் மண்பானையில் இருந்து  தண்ணீர் குடித்ததற்காக உயர்சாதியைச் சார்ந்த பள்ளியாசிரியர் அதைச்சொல்லியே அடித்திருக்கிறார்.பண்ணையார்கள் இளவயது பெண்களின் பால் ஆரோக்கியமாக இருக்கும் என்ற எண்ணத்தில் அவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று எல்லம்மா சொன்னாள். அடிக்கடி பண்ணையாரின் குழந்தைக்கும் தன்குழந்தைக்கும் பால் கொடுக்க போதுமான அளவு பால் சுரக்காதபோது பண்ணையாரின் குழந்தைக்கே முன்னுரிமை கொடுக்க வற்புறுத்துவார்கள்.அக்கம்மாவுக்கும் உண்மையில் எங்கள் இனத்தில் பல பெண்களுக்கும்  என் குடும்ப உறுப்பினர்களுக்கும் குடும்பத்தினூடாக விரிவடைந்திருந்தவர்களுக்கும்தொன்னூறுகளில் குழந்தை பார்முலா வரும்வரை இருந்த அனுபவம் பாலூட்டும்முறை கல்வி மற்றும் நகரத்தை நோக்கி குடியேற்றம் போன்ற மாற்றத்தால்இந்திய இனங்களில் சமூக இணக்கமாக உருமாறியது.இனத்துக்குள் முலைப்பாலூட்டல்:மற்ற குழந்தைக்கு முலைப்பால்கொடுப்பதை அக்கம்மாவுக்கு என்ன நடந்தது என்று விளக்க ஆங்கில மொழி ஒரு வார்த்தையை கொடுத்து எளிதாக்கியது. இனி அதை wet nursing என்று கூறுவேன்.பிற்படுத்தப்பட்ட இனப்பெண்கள் மற்ற குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுப்பது எவ்வளவு பரவலாக இருந்தது என்பதைஅறியமுடியாமல் இருக்கிறது. இதைப்பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வு எதுவுமில்லை மற்றும் இணையத்தில் எவ்வித தகவலும்இல்லாதபோதும் கிராமங்களில் உள்ள குடும்பங்களில் சொல்லப்பட்ட உண்மைக் கதைகள் ஏற்படுத்திய தாக்கத்தினால் குறிப்பாக தலித் எழுத்தாளர்களின் கதைகளிலும் கவிதைகளிலும் இவர்களைப்பற்றி வந்துள்ளது.என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் மற்றும் மற்ற தலித் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது இளைய தலைமுறையினர் முலைப்பால் கொடுத்த தலித் பெண்களைப்பற்றி அறிந்திருக்கவே மாட்டார்கள் என்பதை உணர்ந்தேன். மடிகா இன முதிய பெண்களிடம் பேசியபோது அவர்கள் அவ்வழக்கத்தை சிறப்பானதாக பார்க்கவில்லை. அதிகார வர்க்கத்தினரால் கொண்டுவரப்பட்டு பலவந்தமாகவாங்கப்பட்ட வேலைகளில் அதுவும் ஒன்றே ஆகும்.ஆனால் எல்லா முலைப்பால் கொடுக்கும் பெண்களும் பலவந்தப் படுத்தப்படவில்லை. தொர்னகல்லில் சேரியில் வசிக்கும்பெண்கள், தம் இனத்திற்குள் தனக்கு பிறக்காத கைக்குழந்தைகளுக்கு விருப்பமுடன் முலைப்பால் கொடுப்பது வழக்கமாக இருந்தது என்றார்கள்.இது அநேகமாக பிரசவத்தின்போது தாயை இழந்த குழந்தைகளுக்காக இருந்தது என்று எல்லம்மா சொன்னாள்.எனது மறைந்த அம்மம்மா அல்லது தாய்வழிப் பாட்டி, அவளது தலைமுறையைச் சார்ந்த எத்தனை பெண்கள் குழந்தைப் பேற்றின்போது இறந்தார்கள் என்றும் பதின்ம வயதுப் பெண்கள் முதன்முதலாக குழந்தை பெறும்போதும் அல்லது சிறுவயது முதலே பல குழந்தைகளைப் பெற்றதால் பிரச்சனைகளை எதிர்கொண்ட தாய்மார்களும் இதில் அடக்கம் என்றும் என்னிடம் சொல்வது வழக்கம்.மடிகா இனப்பெண்கள் ஒருபோதும்சேரியில் வசிக்கும் மற்ற குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுப்பதை ஏற்றுக் கொண்டதில்லை. கடமை என்று உணர்ந்த பொழுதும் அன்பாலும் மட்டுமே அப்படிச் செய்தார்கள் என்பதை தெளிவுசெய்ய எல்லம்மா விரும்பினாள்.ஆனால் தோரா பிரிவினர் அப்படியில்லை. அது அடிமைத்தனம் என்று உறுதியாகசொன்னபடியே புடவையை இறுக்கமாக்கினாள்.நான் என்குழந்தை பசியோடு விட்டேன்:எல்லம்மாவிடம் பேசி இரண்டு மாதங்களுக்குப் பின் நான் தொர்னக்கல் சென்றேன். பின் ஒரு பிற்பகலில், அருகிலுள்ள பெண்கள், நாளில் பெரும்பகுதியை யாரோ ஒருவர் வீட்டில் வேலைசெய்துவிட்டு கூட்டமாக கூடி தேனீர் அருந்தியபடியே பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். நான் வீட்டைவிட்டு அவர்களை சந்திக்க சென்றபோது வானம்ஆரஞ்சுநிற கீற்றோடு காட்சியளித்தது.இந்தப் பெண்களோடு நான் வளர்ந்தேன். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையில் தொர்னக்கல் செல்லும்போது அவர்களை சந்திப்பேன்.(தொடரும்)-சங்கர சுப்பிரமணியன்.நன்றி: ஜான்வி உப்புலெடி / அல் ஜஷீரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *