பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் உளவு அமைப்புக்கள்!…. ஏலையா க.முருகதாசன்.

„உளவு அமைப்புக்கள் ஒற்றர்ப் பெண்களை அவர்களின் உடல் கவர்ச்சி,உடழகு போன்றவற்றைப் பயன்படுத்தி காமக் கிழத்திகளாக்கி வேற்று நாட்டு விஞ்ஞானிகள்,தொழில்நிறுவன அதிகாரிகள்,பாதுகாப்புப் படை அதிகாரிகள் போன்றவர்களிடமிருந்து இரகசியங்களை கறக்க வைத்து அறிந்து வருகிறார்கள்.இது ஒரு இசைவாக்கம் பெற்ற பெண்ணடிமைத்தனமாகும்.உளவு அமைப்புகளும் பெண்ணடிமைத்தனத்தை வளர்த்துவிடுகின்றன என்பது பற்றித் தமிழில் யாருமே எழுதியதாக நான் அறியவில்லை.எனக்குத் தெரியாமலம் இருக்கலாம், இதுவே முதலாவது கட்டுரையாகவும் இருக்கலாம்’.
![]()
பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் உளவு அமைப்புக்கள்
ஏலையா க.முருகதாசன்.
தங்கள் சம உரிமையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் உலகப் பெண்களின் தினந்தான் பங்குனி 8.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி எட்டாந் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாக முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நாள் பெண்கள் பெற்றெடுத்த உரிமைகளுக்காக கொண்டாட்டமாகவும்,தொடர்ந்தும் தமது உரிமைகளுக்காக போராடும் போராட்டப் பிரகடனமாகவும் இருமுக நாளாகக் கொணடாடப்படுகின்றது.
அனைத்துலகப் பெண்களின் உரிமைசார் நிலையில் அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் எதிர்கொள்ளும் அகப்புற அடக்குமுறை வேறு வேறு விதமாகவே இருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளிலும்கூட பெண்களின் சமஉரிமை பேணல் வேறு வேறாகவே இருக்கின்றன.ஸ்கண்டிநேவியன் நாடுகளில் இருப்பது போன்ற பெண்ணுரிமை மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருப்பது இல்லை.
ஆசிய ஆபிரிக்க நாடுகளில் அந்தந்த இனக்குழுமங்களின் பண்பாட்டுக்கு ஏற்றவாறு காலத்துக்குக் காலம் அவர்களுக்கான உரிமை கோரல் மிக மிக மெதுவாகவே அங்கீகரிக்கப்படுகின்றன.
பெண்களுக்கான உரிமையின் எல்லைகள் அகலமாக்கப்பட்டிருக்கின்றதே தவிர,அந்தச் சிறை எல்லைகள் முற்றுமுழுதாக அகற்றப்படவில்லை.
நவீன வணிக நிறுவனங்கள் பெண்களின் உடலையும் அழகையும் விலைபேசி தமது உற்பத்திப் பொருட்களின் விற்பனைக்கான விளம்பரங்களாக பயன்படுத்தி வருகின்றன.
இது பெண்களின் அழகையும், உடலையும்,அவர்களின் கவர்ச்சியையும் முதலீடாக்குகின்று ஒரு வணிக உத்திமுறையே.இது உண்மையில் பெண்களை
அடிமைப்படுத்துவதற்கான ஒரு தந்திரமாகும்.பெரும்பாலான உலகப் பெண்கள் தமது அழகுக்கு முன்னுரிமை கொடுப்பதனால் „நீ நல்ல அழகி „ என்று சொன்னாலே அதற்கு மதிமயங்கி விடுகின்றனர்.அதன் மூலமும் வேலைவாங்கப்படுகின்றனர்.
ஆனால் அதே வேளை இது தவறு என்று சொல்லும் போது விளம்பரங்களில் நடிக்கும் பெண்களே தாம் கவர்ச்சியாக ஒளி அல்லது நிழல் விளம்பரப் படங்களில் நடிப்பது எமது உரிமை என்று போர்க்கொடி தூக்குகின்றனர்.தாம் எந்த உடையையும் போட்டுக் கொள்வது தமதுரிமை என்கின்றனர்.
மிகவும் தந்திரமாக குடும்பங்களில் „நீ எவ்வளவு கெட்டிக்காரி’ என்று மனைவியை மகிழ வைத்து மனைவியைக் கொண்டு அத்தனை வீட்டு வேலைகளையும் செய்ய வைத்துவிடுவார்கள்.
பெண் என்பவள் மகளாக இருந்தால் குடும்பங்களில் நூல் வேலிபோன்ற ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு தடுப்பை; போட்டு ஆண்பிள்ளை பெண்பிள்ளை என்ற இருவருக்கமிடையில் நீங்கள் இருவரும் சமனல்ல என்பதை வளர்ப்பு முறையிலிருந்தே வித்தியாசத்தைக் காட்டுகின்றனர்10
உனது அண்ணனோ தம்பியோ எங்கேயென்றாலும் எந்த நேரத்தில் போய் வந்தாலும் பயமில்லை,அனால் நீ பெண்பிள்ளை அதுதான் பயமாக இருக்கிறது என்று பெற்றோர் சொல்வதை அலட்சியப்படுத்தவம் முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக இருந்த பெண் உறுப்பினர்கள் பெண்பிள்ளைகளை இரவு நேரங்களில் தனியாகச் செல்ல விடுவதில்லை அது அடக்குமறை என்றனர்.பெற்றோர்கள் ஏன் அவ்வாறு நடக்கின்றனர் என்பதை அவர்கள் சொல்ல முனைந்தாலும்,அவர்கள் அதைச் சொல்லத் தயங்கினார்கள்.
அதனை நீண்ட நேரம் கவனித்த நான் பெண்பிள்ளைகளை இரவு நேரங்களில் ஆண் நண்பகர்களைச் சந்திக்கும் வேளையில் ஏதூ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களிருவரும் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடத் தோன்றுவதும் அது ஒரு எல்லையைக் கடக்கும் போது உடலுறவு ஏற்படும் தருணத்தை தனிமை உருவாக்கி விடும் என்பதால்தான் பெற்றோர்கள் பயப்பாடுகிறார்கள் என்றேன்.
எப்பொழுதும் எந்த விடயமாக இருந்தாலும் வெளிப்படையாகவும் அறிவுஜீவத்தனமாகவும் கண்ணியமாகவும் பேசும் பண்பு வேண்டும்.அப்பொழுதுதான் விரிவாக உரையாட முடியும்.
ஒரு சமூகத்தில் பெண்;கான பாதுகாப்பு உறுதிசெய்யப்படுதல் வேண்டும்,அல்லாத பட்சத்தில் பெற்றோர்கள் பயப்படுவது சரியானதே(அதற்காக எல்லா நண்பர்களும் நண்பிகளுமே தவறாக நடப்பவர்களும் அல்ல,இத்தகைய நிலையும் உண்டு)
நாம் என்னதான் பெண்விடுதலை சம்பந்தமான கருத்துக்களை எழுத்து வாயிலாகவோ உரைகள் வாயிலாகவோ ஆக்ரோசமாக முன் வைத்தாலும் தனித்துச்
செல்லும் ஒரு பெண்பிள்ளை மீதான பார்வை அவளுக்கு பாதுகாப்பையும்,சக மனுசியாக பார்க்கும் பண்பாட்டையும் கொணடிருக்கிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதுள்ளது.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கான ஒரு அறிக்கையை வெளியிட்டது.அதில் சீலையோ,அரைத்தாவணி மற்றும் சுடிதார் பஞ்சாபி உடையணிந்து வராத பெண்கள் கால்கள் முழுசாகத் தெரியுமளவிற்கு சட்டை அணிந்து வருவார்களாயின் அத்தகையவர்கள் கோவில் நிர்வாகத்திடமிருந்து ஒரு துண்டை வாங்கி சட்டைக்கு மேல் கட்டிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு தாயகத்தில் எத்தகைய எதிர்வினை எழுந்ததோ தெரியாது புலம்பெயர் தேசத்தில் சில எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.
பெண்கள் முழங்கால் தெரியுமளவிற்கோ அல்லது குட்டைப் பாவாடையுடன் கோவிலுக்கு வரும் பட்சத்தில் ஏணைய பக்தர்களின் கவனம் இத்தகு உடையணியும் பக்தர்கள் மீதே செல்லுமென்பதை ஒரு மனித மனங்களின் சபல நிலையிலிருந்து யதார்த்தமாகப் பார்க்காமல் ஆண் பக்தர்கள் ஏன் அவர்களின் உடைகளைக் கவனிக்க வேண்டும் என்ற கருத்துப்பட சிலர் கூறினார்கள்.
கோவிலுக்குச் செல்பவர்கள் அனைவருமே மனதை ஒரு நிலைப்படுத்தியும் கவனச் சிதறல் இல்லாமலும் வழிபடுவார்கள் என்பது யதார்த்தத்திற்கு முரணானதே.
பக்தர்களின் கவனம் சிதறாமல் இருப்பதற்கும்,திiதிரும்பாமல் இருப்பதற்குமே கோவில் நிர்வாகம் இப்படியான வேண்டுகோளை விட்டிருக்கின்றது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்தவர்கள்,ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிலும் ஜிம் என்று தமது உடலை ஒழுங்கமைத்துச் செல்லும் இளைஞர்களைக் கண்டால் அவர்கள் மீது இளம் பெண்களுக்கு சபலம் ஏற்பட வாய்ப்புண்டு எனவே பெண்பிள்ளைகளின் உடையணியும் சுதந்திரத்தை ஏன் தடுக்க வேண்டும் எனக் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.புரட்சிகரமான கருத்துக்களைக் கூறுகிறோம் என்றவர்கள் அணு; பெண் ஈர்ப்புத் தன்மையின் விளைவுகளை சிக்மண்ட் பிராய்டின் உளவுக் கோட்பாட்டின் தன்மையில் பார்க்கத் தவறிவிட்டனர்.
பெண்விடுதலை சம்பந்தமாக போன போக்கில் கருத்துரைப்போர் மனித உளவியல் போக்கையும் கருத்தில் கொண்டு கவனத்தில் எடுக்க வேண்டும்.
பல்வேறு காரணிகளுக்கு அமைய பெண்விடுதலை சார்ந்து கருத்துத் தெரிவிப்பதில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன.
ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் பெண்கள் நோக்கிய அடிமைத்தனம் இப்பொழுது வெகுவாகக் குறைந்துள்ளது என்பதை பெண்கள் ஏற்க ஏன் மறுக்கிறார்கள் என்பதைப் பரிந்து கொள்ள முடியவில்லை.
பெண்கள் தம்மை அடிமைப்படுத்தும் அடிமை விலங்கினை ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டு செல்கையில் அவர்களை அடக்குவதற்கான புதிய விலங்குகள்
அவர்களை அடிமைப்படுத்துவதாக அவர்கள். நினைக்கிறார்கள்,அது உண்மையாகவும் இருக்கலாம்.
ஆண்களே இப்படித்தான்,ஆண்கள் மோசமானவர்கள் என்ற அடிப்படைக் கருத்துக்கமையவே பெண்கள் தொடர்ச்சியாக ஆண்களை பெண்ணடிமைத்தனம் தொடர்பான கருத்துரைத்தலுக்கு ஏற்றவாறு வெறுக்கின்றனர்.
பெண்கள் என்றாலே அவர்கள் அறிவற்றவர்கள் என்ற பொதுக்கருத்தினை மெய்பிக்க வேண்டுமென்பதற்காக தமது மனைவியோ பெண்பிள்ளைகளோ வீட்டுக்குள்ளேயே ஒரு கருத்துரைத்தலிலோ,விவாதத்திலோ ஈடுபட்டு தமது கருத்தினை சிறப்பான முறையில் முன் வைத்த போதும்,தாங்கள் ஆண்கள்,தாங்கள் எல்லாம் அறிந்தவர்கள் என்ற மமதையில், அவர்களால் சொல்லப்படுகின்ற கருத்தினை ஏற்று அவர்களைப் பாராட்டத் தயங்குகின்றனர்.
ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல பெண்ணடிமைத்தனம் உலகளாவிய பொதுத் தன்மையுடனும், நாடுகள், இனக் குழுமங்கள் என்ற பிரிவிற்குற்பட வேறுபடுகின்றது.
எம்மதங்களாயினும் மதவெறியுள்ள நாடுகளில் பெண்ணடிமைத்தனம் மிகையாகவே இருக்கின்றது.ஒரு இனக்குழுமத்திற்குள்ளேயே குடும்பங்களுக்கு குடும்பம் பெண்ணடிமைத்தனத்தை நடைமுறைப்படுத்துவதில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன.
பூப்படைந்த பெண்களின் பாலுறப்பின் உடலுறவுப் பகுதிக்கான பகுதியை திருமண காலம் வரையும் தைத்து மூடிவிடும் மிலேச்சத்தனம் ஒருசில இனக்குழுமங்களிடம் இருந்து வருகின்றது.
ஒரு சில ஆண்டுகளுக்க முன்னர் ஒரு ஆங்கில நூலினைப் பார்த்த போத அதில் பெணஆ;களின் இடுப்பில் அணியும் உலோகத்திலான ஒரு பட்டி போன்று இருந்தது.அதில் பெண்களின் பாலுறுப்புப் பகுதியில் சிறுநீர் கழிப்பதற்கான துவாரமும் பிட்டப் பகுதியில் மலம் கழிப்பதற்கான துவாரமும் இருந்தன.
இது கணவர்கள் வெளியில் போகும் போது பெண்கள் அதனை இடுப்பில் பூட்டினால் பூட்டிஅதன் சாவியை கணவர்கள் எடுத்துச் செல்வார்கள் என இருந்தது.இது காட்டுமிராண்டித்தனமான செயலே ஆகும்.
இதைவிடக் கொடுமையாக புலம்பெயர் நாடொன்றில் மனைவி வெளியே போயிட்டு வரும் வேளைகளில்,அவரை குளியறைக்குள் அழைத்துச் சென்று அவரின் கீழ் உள்ளாடையை அகற்றி அவரைச் சந்தேகத்துடன் பார்த்ததாக ஒருவர் சொல்லி அறிந்தேன். இது மிக மோசமான அருவருக்கத்தக்க பெண்ணடிமைத்தனமாகும்.
அன்றைய உலோகக் கருவி அணிந்தமைக்கான அடிப்படைக் காரணமும் இன்றைய காலத்தில் மனைவியின் உள்ளாடையை அகற்றிப் சந்தேகத்துடன் பார்க்கும் அடிப்படை எண்ணமும் ஒன்றேயாகும்.
அது போல் திருமணம் முடிந்து முதலிரவு வரை திருமணமான பெண் தான் திருமணத்திற்கு முன்னர் யாருடனும் உடலுறுவு கொள்ளவில்லை என்பதை அவளுடைய பாலுறுப்பின் கன்னித்திரை கிழியாமல் இருக்கிறதூ என்பதைப் படுக்கையில் வெள்ளைச் சீலை ஒன்றை விரித்து அதில் இரத்த அடையாளம் இருக்குமாயின் ஏற்றுக் கொள்ளலும்,அவ்வாறு இல்லாத போது அப்பெண் விவாகரத்து உட்பட பல தண்டனைகளுக்கும் உட்படுகின்ற கொடுமை இன்னும் சில சமூகங்களில் இருக்கவே செய்கின்றது.
கடுமையான வேலை காரணமாகவோ,ஒரு ஆணுடன் உடலுறுவு கொள்ளாது வேறு காரணத்தால் கன்னித்திரை கிழியுமானால் அவள் கற்பிழந்தவள் என்று தூற்றப்படுவதும் தண்டனைக்குட்படுவதும் சர்வசாதரணமாக சில இனக்குழுமங்களில் இடம்பெறுகின்றன..
கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு இனக்குழுமத்தில் நடைமுறையில் இருக்கும் திருமணபந்த கடுமையான போக்காக,தனது மகளுக்கு திருமணமாகி முதலிரவு முடிந்ததன் பின் படுக்கையில் விரிக்கப்பட்ட வெள்ளைத்துணியில் இருக்கும் இரத்த அடையாளத்தை ஒரு கௌரவமாகவும் தாம் தம் மகளை ஒழுக்கமாக வளர்த்திருக்pறோம் என்பதை அனைவரும் அறியும் பொருட்டு அத்துணியை தமது வீட்டு யன்னலில் தொங்கவிட்டிருப்பார்கள் என்றிருந்தது.இது எனக்கு அதிர்சசியைக் கொடுத்தது.இச்செய்தியை பலரும் வாசித்திருக்கலாம்.திருமணத்துக்கு முன் திருமணமாகப் போகும் பெண்களின் கன்னித்திரை சிதைந்திருக்கும் பெண்களை தமது குடும்பத்துக்கு அவமானம் எனக் கருதி கொலை செய்து விடுகின்ற கொடுமையான செயல்களைச் செய்கின்ற சமூகக்கூட்டம் இன்னும் இருக்கின்றது.
தொழிற்சாலைகளிலும்,பலதரப்பட்ட தொழில்சார் முகவர் நிலையங்களிலும் அந்நிறுவனத்தின் முதலாளியின் செயலாளராகவும்,முகாமையாளரின் செயலாளராகவோ அல்லது தனிப்பட்ட அலுவலகராகவோ பெண்களையே நியமிக்கிறார்கள்.
அவ்வாறு நியமிக்கும் போது அதுசார்ந்த கல்வித் தகுதி,ஆளுமை என்பனவற்றுடன் அவர்களின் அழகையும் கவர்ச்சியையும் மேலதிகத் தகுதியாகப் பார்க்கின்றனர்.நேர்முகப் பரீட்சையில் அத்தகையவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.
ஒரு பெண் அருகிருத்தல் என்பது திறமையான ஆண்களை இன்னும் ஊக்குவிப்பதாக ஆய்வுகள் சொன்னாலும் அதுவும் பெண்களை அவர்களின் அறிவு தாண்டி உடலழகிற்காகவும் கவர்ச்சிக்காகவும் பயன்படுத்தல் என்பதும் ஒருவித பெண்ணடிமைத்தனமேயாகும்.
தம்மைத் தமது அழகிற்காகவும் கவர்ச்சிக்காகவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை இப்பணிகளில் இருக்கும் பெண்கள் நன்கறிந்திருந்தாலும் தமக்கு மாதச்சம்பளமாக அதிகளவு தருகிறார்கள் என்பதற்காக தம்மை அடிமைப்படுத்துகிறார்கள் என்பதைக் கடந்து இசைவாக்கம் பெற்றுவிடுகின்றனர்.
வேறு நாடுகளுடன் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான உற்பத்தித் தொழில் நிறுவனங்களின் முதலாளிகளுடனோ அல்லது முகாமையாளர்களுடனோ அல்லது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்வதற்காக வெளிநாடுகளுக்கு பயணமாகும் போது செயலாளர்களாக இருக்கும் பெண்களையும் அழைத்துச் செல்கின்றனர்.
ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது ஏற்படும் சறுக்கல்கள் தளர்நிலைகளை தமது கவர்ச்சிகரமான உரையணுகுமுறை வழியாக பெண்கள் தமது நிறுவனத்தின் திட்டத்தை முழமையடையச் செய்து விடுகின்றனர்.
இத்தகு அணுகுமுறை உலகெங்கும் உள்ள வணிகத்தின் பொது இராஜதந்திரமாகும்.எவ்வளவு பெரிய கல்விமான்களாக இருந்தாலும்,தொழில்சார் அறிவுஜீவகளாக இருந்தாலும் அவர்களிடமும் ஒரு பலவீனம் இருக்கும்,அந்தப் பலவீனமே பலமாக எதிராளர்களால் பயன்படுத்தப்படுகின்றது.(இன்னும் விபரமாகக் குறிப்பிடுவதானால் தேவை கருதி செயலாளர்கள் தம்மை இழந்து செய்ய முடியாத காரியத்தையும் செய்ய வைப்பார்கள்.அது விரிவாக பேசப்படவும் எழுதப்படவும் வேண்டிய வடியமாகும்.பெண்ணடிமைத்தனம் பற்றி விபரிக்க வேண்டிய இக்கட்டுரையில் அது திசையை மாற்றிவிடும்)
இன்னும் குறிப்பாக உலக நாடுகளின் உளவு அமைப்புக்கள் பெண் ஒற்றர்களை இரகசியங்களை அறியும் பணியாளர்களாக நியமித்திருக்கிறார்கள்.அவ்வமைப்பகள் பெண் ஒற்றர்களுக்க அதற்கான பயிற்சியைக் கொடுத்திருப்பார்கள்.
ஒரு நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,எந்த அரசாங்கம் ஆட்சியில்; இருந்தாலும் உளவு அமைப்புகளில் மாற்றம் ஏற்படாது.
நாட்டின் பகாதுகாப்புக் கருதி இவ்வமைப்புககள் கலைக்கப்படுவதும் இல்லை அதன் திறணி குறைக்கப்படுவதும் இல்லை.
தாமறிந்தோ அறியாமலோ இராணுவ இரகசியங்கள் தொட்டு பல்வேறு பொருளாதார நிதிசார் இரகசியங்கள் என பல்வேறு இரகசியங்களை தாரை வார்த்துக் கொடுக்கும் இடமாக இருப்பது விமானப் பயணங்களின் போதே.
பல்வேறுபட்ட விமான நிறுவனங்களின் பணிபுரியும் அழகான பெண்கள் உளவு நிறுவனங்களின் ஒற்றர்களாக இருப்பதும்,விமானங்களின் பயணம் செய்யவிருக்கும் விஞ்ஞானிகள்,தொழிநிறுவன அதிகாரிகள்,பாதுகாப்புப்படைகளின் அதிகாரிகள் பற்றிய விபரங்களை ஏற்கனவே அறிந்து வைத்திருக்கும்; உளவு அமைப்புக்கள் அவர்கள் பற்றிய விபரங்களை விமானப் பணிப் பெண்ணாக இருந்து கொண்டு ஒற்றர் வேலையில் ஈடுபடும் பெண்களுக்க அறிவித்துவிடுவார்கள்.
விஞ்ஞானிகள்,தொழில்நிறுவன அதிகாரிகள்,பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகள் என அவர்கள் தங்கும் விடுதிகளில் அவர்களையும் தங்க வைப்பதன் மூலமும் இத்தகையோருடன் நட்புக் கொண்டு அது நெருக்கமான நட்பாகி ஒரே அறையில் ஒரே படுக்கையில் நித்திரை கொள்ளும் நிலைக்கு அவர்களைக் கொண்டு
அவர்களிடமிருந்து இரகசியங்களை பெண் ஒற்றர்களாக இருப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.
அனைத்து ஏற்பபாடுகளையும் உளவு அமைப்புகளே செய்து கொடுத்து விடுவார்கள்.இன்னும் ஒற்றர்களாக பணிபுரியும் விமானப் பணிப்பெண்களின் நயமிகு கனிவான பேச்சுக்களாலும் அணுகுமுறைகளினாலும் அவர்களை அழைத்துக் கொண்டு சுற்றுலா செல்வதும்,அங்கு தனியறையில் தம்மை இழந்த நிலையில் பெண் ஒற்றர்களிடம் நாட்டின் இரகசியங்களை,தொழில் நிறுவன இரகசியங்களை,விஞ்ஞான இரகசியங்களை கக்கிவிடுவார்கள்.
பெரும் புயலடித்து அடைமழை பெய்து கொண்டிருக்கும் போதுகூட தீக்குச்சி நெருப்பை அணையாமல் கொண்டு போகும் திறமையும்,காற்றுப்புகாத இடத்திலும் புகக்கூடிய வல்லமை உளவு அமைப்புகளுக்கு உண்டு.
உளவு அமைப்புகள் ஒற்றர்ப் பெண்களை தமது தேவைக்காக பயன்படுத்துவதன் மூலம் அவர்களை நவநாகரீக அடிமைகளாக்கியுள்ளார்கள்.பெண்ணடிமை உளவு அமைப்புளிலும் உண்டு.
![]()