இது என்ன கொடுமை…! மனைவிகளை மாற்றிக் கொண்டு குழந்தை குடும்பத்துடன் வாழும் புதிய கலாசாரம்

அலிசியா மற்றும் டைலர் ரோஜர்ஸ் தம்பதிக்கு 2 குழந்திகள் உள்ளனர். ஆனாலிவர்கள் தங்கள் நண்பர்களான சீன் மற்றும் தயா ஹார்ட்லெஸ் தம்பதி மீது காதல் வயப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் 2020 ஆம் ஆண்டு முதல் நான்கு பேராக தங்கள் காதல் உறவைத் தொடங்கினார்கள். ஒவ்வொரு இரவும் இரண்டு பெண்களும் தங்கள் துணையை மாற்றிக் கொள்கிறார்கள். சில சமயங்களில் அலிசியாவின் கணவர் தயாவுடன் தூங்குகிறார் சில சமயங்களில் தயாவின் கணவர் அலிசியாவுடன் தூங்குவார்.

அலிசியா மற்றும் தயா 2021 இல் கர்ப்பமானார்கள். இருவருக்கும் தலா ஒரு குழந்தை பிறந்தது. இருவருக்கும் தங்கள் குழந்தைகளின் தந்தை யார் என்று தெரியாது. சமூக ஊடகங்களில் வீடியோக்கள் மற்றும் படங்களைப் பகிர்வதன் மூலம் அவர்கள் தங்கள் வித்தியாசமான உறவை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள். இவர்களுக்கு டிக்டாக்கில் 120,000 பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 30,000 பின்தொடர்பவர்களும் உள்ளனர். நான்குபேரும் தங்கள் வழக்கத்திற்கு மாறான உறவைப் பற்றி வெறுக்கத்தக்க கருத்துக்களை விமர்சனமாக சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.

சிலர் அவர்களை “மோசமான பெற்றோர்” என்று குற்றம் சாட்டி வருவதாக கூறினர். அதே சமயம் குழந்தைகளிடம் நாங்கள் எதையும் மறைக்கவில்லை என்று அலிசியா கூறியுள்ளார். நாங்கள் ஒருவரையொருவர் காதல் செய்கிறோம் என்பதை எங்கள் குழந்தைகளுக்கு முன்பே தெரியும். நாங்கள் அவர்களிடம் கூறி உள்ளேன். ‘அம்மாவுக்கு ஒரு ஆண் காதலர் இருக்கிறார், அப்பாவுக்கு ஒரு காதலி இருக்கிறார், நாங்கள் ஒன்றாக வாழப் போகிறோம். நாம் அனைவரும் ஒரே பெரிய குடும்பமாக மாறுவோம். நீங்கள் எங்களை நடத்துவது போல – பெற்றோராக அவர்களை நடத்துங்கள். என கூறப்பட்டு உள்ளது என அலிசா கூறினார்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button