52 ஆண்டுகள் கழித்து PHD பட்டம் பெற்ற அமெரிக்க ஆடவர்…

அமெரிக்காவில் நிக் எக்ஸ்தன் (Nick Axten) 52 ஆண்டுகள் கழித்து PHD பட்டத்தைப் பெற்று வயது தடை அல்ல என நிரூபித்துள்ளார்.

இப்போது அவருக்கு வயது 76.

எக்ஸ்தன் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகக்தில் கணிதவியல் சமூகவியல் படிப்பை 1970ஆம் ஆண்டில் மேற்கொண்டார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அதனை முடிக்காமல் பிரிட்டனுக்குத் திரும்பியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

ஆனால் அவர் தமது படிப்பைக் கைவிடவில்லை.

விடாமுயற்சியுடன் செயல்பட்ட அவருக்கு PHD பட்டம் அவரது மனைவி, பேத்தி ஆகியோர் கண்முன் வழங்கப்பட்டது.

“எமது ஆராய்ச்சி மிகவும் கடினமாக இருந்தது. அதற்குத் தீர்வுகாண 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அதனால் என்ன?” என்றார் எக்ஸ்தன்.

எக்ஸ்தனின் ஆராய்ச்சி மனித நடத்தையைச் சார்ந்து இருந்ததாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button