திமிங்கிலத்தின் கழிவுகள் தங்கத்திற்குச் சமம்?

திமிங்கிலக் கழிவுகளின் மதிப்பு தங்கத்திற்குச் சமம் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நார்வேயின் கடல்துறை ஆய்வுக் கழகம் கோடைக்காலத்தின்போது ஸ்வால்பார்ட் (Svalbard) பகுதியில் தினமும் மிதக்கும் சுமார் 600 டன் திமிங்கிலக் கழிவுகளை ஆராய்ந்தது.

கேட்பதற்கு அருவருப்பாக இருந்தாலும் பல்லுயிர்ச் சூழலில் அதன் மதிப்பு தங்கத்திற்குச் சமம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பல்லுயிர்ச் சூழலுக்கு அத்தியாவசியமாகக் கருதப்படும் phytoplankton என்ற நுண்ணிய உயிரினங்களின் வளர்ச்சியை அவை ஊக்குவிப்பதாக அவர்கள் கூறினர்.

வர்த்தகத்திற்காகத் திமிங்கிலத்தை வேட்டையாட அனுமதிக்கும் ஒருசில நாடுகளில் நார்வேயும் ஒன்று.

ஆனால் தற்போது உலகிற்குத் திமிங்கிலக் கழிவுகள் அவசியம் என்று அறிவியல் கூறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button