காதலில் விழுவது எப்படி? அதுவும் இணையம்வழி …அமெரிக்க மக்களின் மாறுபட்ட கருத்துகளைக் காட்டும் ஆய்வு..

அமெரிக்காவில் 10இல் 3 பேர் துணைதேடும் செயலியைப் பயன்படுத்தியதாகவும் துணைதேடத் துணைபுரியும் நிறுவனங்களை அணுகியதாகவும் கூறியுள்ளனர்.

மக்கள் அது குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்ததாக Pew ஆய்வு நிறுவனம் கண்டறிந்தது.

53 விழுக்காட்டினர் அவர்களது அனுபவம் ஓரளவுக்கு நன்றாக அமைந்ததாகக் கூறினர்.

38 விழுக்காட்டினர் அவர்களது அனுபவம் சிறப்பாக அமையவில்லை என்றனர்.

இணையம்வழி துணை தேடும் பலர் பாதுகாப்பை முன்னுரிமையாக வைத்துள்ளனர்.

பாலியல் தாக்குதல், வன்முறை, ஒருவரை விடாமல் பின்தொடர்வது ஆகிய சம்பவங்கள் அண்மையில் அதிகரித்துள்ளதால், பயனீட்டாளர்களின் பின்னணியை உறுதி செய்யும் அவசியத்தைப் பல நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

துணைதேடும் செயலியை 30 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button