கொங்கா நடனமாடிய நாய்கள்….உலகச் சாதனைப் புத்தக்கத்தில் இடம்பிடித்தன
வொல்ஃப்காங் லௌவென்பர்கர் (Wolfgang Lauenburger). இவர் ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்தவர். தமது நாய்களைக் கொங்கா (Conga) நடனமாட வைத்து உலகச் சாதனைப் புத்தக்கத்தில் இடம்பிடித்துள்ளார்.
இதன்வழி 2020இல் தமது மகள் அலெக்ஸா லௌவென்பர்கர் (Alexa Lauenburger) செய்த சாதனையயும் அவர் முறியடித்தார்.
கொங்கா என்பது ஒருவர் பின் ஒருவர் வரிசையாக நின்று ஆடும் லத்தீன் அமெரிக்க நடனம்.
ஒரே கொங்கா வரிசையில் ஆக அதிகமான நாய்கள் இடம்பெற்றதற்காக வொல்ஃப்காங்கிற்கு அந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவர் 14 நாய்களை நடனமாட வைத்தார். இதற்கு முன் அவரது மகள் 8 நாய்களை வைத்து அச்சாதனையைப் புரிந்தார்.
![]()