மிகச்சிறியது… ஆனால் ஆபத்தானது… ஆஸ்திரேலியாவில் காணாமற்போன கதிரியக்கத் திரவம்
ஆஸ்திரேலியாவில் மிக ஆபத்தான திரவத்தைக் கொண்ட உறை ஒன்று காணாமற்போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாணயத்தைவிடச் சிறிய அளவிலான அந்த உறையில் கதிரியக்கத் தன்மை கொண்ட Caesium-137 திரவம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் காணாமற்போன அதனைத் தேடும் முயற்சிகளை மாநில அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.
பேட்டா, காமா (beta, gamma) கதிர்களை வெளியேற்றும் அந்தத் திரவத்தைப் பெர்த்துக்கு விநியோகம் செய்யும் வழியில் அது வாகனத்திலிருந்து வெளியே விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அது கிரேட் நார்தன் ஹைவே (Great Northen Highway) நெடுஞ்சாலையில் காணாமற்போனதாக நம்பப்படுகிறது.
அந்த Caesium-137 உறை விழுந்திருப்பதாக நம்பப்படும் பகுதிக்கு அருகில் வசிக்கும் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த உறையைத் தொட்டாலே தோல் எரிந்துவிடும், நோய் ஏற்படும், புற்றுநோய் உண்டாகும் ஆபத்துகள் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
![]()