சர்வதேச போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்ற ஈரான் வீராங்கனை
கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில், ஈரானைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சாரா காடெம் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றள்ளார்.
ஈரானைச் சேர்ந்த 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண், முறையாக ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு எதிராக நாடு முழுவதும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்து உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் ஈரான் வீராங்கனைகள் ஹிஜாப் அணியாமல், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
![]()