செய்திகள்

அணுவாயுதப் போர், பருவநிலை மாற்றம்… “நெருங்கி விட்டதா அழிவுக் காலம்?”

உலகம் உண்மையிலேயே அழிவை நோக்கிச் செல்கிறதோ என்ற கவலை எழுந்துள்ளது.

உத்தேச அணுவாயுதப் போர், பருவநிலை மாற்றத்தால் நேரும் பேரிடர்கள் முதலியவற்றால் பேரழிவு ஏற்படுமோ என்ற பயம் உருவெடுத்துள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி இறுதியில் உக்ரேன் மீது படையெடுத்த ரஷ்யா, அணுவாயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக மிரட்டியது. அதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலகம் அழிவை நோக்கிச் செல்கிறது என்றார்.

இவ்வாண்டு உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டியது.

“பருவநிலை மாற்றத்தால் உலகம் பேரழிவை நோக்கி விரைகிறது”

என்று ஐக்கியநாட்டு நிறுவனப் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் எச்சரித்தார்.

பாகிஸ்தானின் பெரும்பகுதியை மூழ்கடித்த வெள்ளம், 70 நாள் சீனாவை சுட்டெரித்த வெப்ப அலை, ஆப்பிரிக்காவில் பயிர்களைச் சேதப்படுத்திய வெப்பம்…

பருவநிலை மாற்றத்தால் பல நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்த நிலையில் உலகம் அழிவை நோக்கிச் செல்கிறதோ என்ற கவலை மேலோங்கியிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *