செய்திகள்

அம்மா திட்டிகிட்டே இருக்காங்க’: போலீசில் புகாரளித்த சிறுவன்

மத்திய பிரதேசத்தில், தன் தாய் திட்டிக் கொண்டே இருப்பதாகக் கூறி, 3 வயது சிறுவன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தான். அவனது துணிச்சலை பாராட்டிய மாநில உள்துறை அமைச்சர், அவனுக்கு சைக்கிள் பரிசளித்தார்.

புர்ஹான்பூரிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சமீபத்தில் 3 வயது சிறுவன் தன் தந்தையுடன் சென்றான்.
அங்கு, தன் தாய் அடிக்கடி திட்டுவதாகவும், தன் மிட்டாய்களை திருடிவிட்டதாகவும் கூறினான்.
இதை புகாராக எழுதிய போலீசார், அக்குழந்தையிடம் கையெழுத்து கேட்டனர். அவனும் அதில் ஏதோ கிறுக்கலாக எழுதினான்.
இது பற்றி சிறுவனின் தந்தை போலீசாரிடம் கூறுகையில், ‘தாய் பற்றி புகார் அளிக்க வேண்டும் என என் மகன் அடம்பிடித்ததால், போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தேன்’ என்றார்.
இது பற்றிய ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதைப் பார்த்த ம.பி., மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, நேற்று அக்குழந்தையிடம் ‘வீடியோ கால்’ வாயிலாக பேசினார்.

அப்போது, அவனுக்கு சைக்கிளும், சாக்லேட்டுகளும் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.
இதன்படி, சில மணி நேரம் கழித்து, போலீசார் அச்சிறுவனுக்கு சைக்கிளையும், சாக்லேட்டுகளையும் அமைச்சர் பரிசாக அளித்ததாகக் கூறி வழங்கினர்.

உடனே, அச்சிறுவன் மகிழ்ச்சியாக சைக்கிளை ஓட்டிச் செல்வதை அனைவரும் கண்டு ரசித்தனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *