ஆகாயப்பந்தல் 14…. ஏலையா க.முருகதாசன

மகேந்திரராஜா,சசிகலா,சரவணன்,சாரிணி,மதுசா,தர்மசிங்கம்,பூரணேஸ்வரிஎல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து இருந்தனர். தர்மசிங்கமும்,பூரணேஸ்வரியம் தமது உறவினர் வீட்டில் தமது கிரகத்துக்கல்லாத ஒரு அழகிய இளம் யுவதியிருப்பதைக் கண்டதும் அவளின் அழகு அவர்களை வியக்க வைக்க இப்படி ஒரு அழகா என அவர்களை மகிழ்ச்சியடைய வைக்கின்றது.
பூமியில்,அந்தந்த நாடுகளில் ஆண்களும் பெண்களும் உடல்வாகும் அழகும் கொண்டவர்கள்தான் என்பதோடு தமது கிரகத்திலிருப்பவர்கள் கொஞ்சம் வேறுபாடு கொண்ட அழகுடையவர்கள் என்பது உண்மையெனினும் பூமி மனிதர்களும் தாமும் ஒன்றாக நிற்கும் போது பெரிதாக வித்தியாசத்தைக் காண முடியாது என்பதம் அவர்களுக்குத் தெரியும்.
அதனால்தான் ஜேர்மனி போகும் நகரத்தில் உள்ள அனைத்து நாட்டுப் பொதுமக்களாலும் அவர்களை அடிக்கடி காண்கிற தமிழ் மக்களாலும் இவர்கள் பூமி மனிதர்கள் போல இல்லையே என்ற நுட்பமான வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடிவதில்லை.
மகேந்திரராஜா10சசிகலா,சரவணன்,சாரிணி,தர்மசிங்கம் பூரணேஸ்வரி ஆகியோர் வேற்றுக்கிரகவாசிகளாக இருந்த போதும் ஜேர்மனியில் இலங்கைத் தமிழர்கள் அதவும் யாழ்ப்பாணத் தமிழர்கள் எப்படித் தமிழை உச்சரித்துப் பேசுவார்களோ அதைப் போலவே அவர்களும் பேசியதால் அவர்களை போகும் நகரத்தில் உள்ளவர்களால் இவர்கள் வேற்றாட்களாக இருக்குமோ எனப் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
இவர்களும்,அந்நகரத்தில் மட்டுமே இருக்கம் இவர்களுடைய கிரகத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்கான விடுமுறைக் காலங்களில் நியூஸ்லாந்து அல்லது அவுஸ்திரேலியாவுக்குப் போய் அங்கிருந்து விடுமுறைக்கான விமானங்கள் என வெளியாரை நம்பவைக்கப்பட்ட விமானங்கள் தென்துருவத்திலுள்ள வேற்றக்கிரக வாசிகள் வந்து போகும் விமான நிலையத்துக்குச் சென்று அங்கு பூமிக்கடியிலுள்ள வீடுகளில் தங்கிநின்று அங்கிருந்து எண்கோண விமானத்தில் வேற்றக்கிரகத்துக்குச் சென்று வருவது வழக்கம்.
உலக வல்லரசு நாடுகளால் பூமிக்கு மேலே செலுத்தப்பட்டு மிதந்து கொண்டிருக்கம் சட்லைட்டுகளால்கூட ஜேர்மனி போகும் நகரத்தில்தமிழ் பேசிக் கொண்டு வாழும் இவர்களையோ இவர்களைப் போன்றவர்களையோ தமக்கும் அவர்களுக்கும் ஏதோ வித்தியாசம் இருக்கின்றதே என்பதைக் கண்டறிய முடியவில்லை.

அந்த சட்லைட்களில் பொருத்தப்பட்டுள்ள, மிக நுட்பமான தூசியிலுள்ள நுண்ணிய அணுக்களிலுள்ள கோடியாகப் பிரித்துப் பார்க்கையில் காணப்படும் அளவினைக்கூட கண்டறியும் சட்லைட்டுகளால்கூட கண்டறிய முடியாதவாறு அந்த எண்கோண விமானம் விஞ்ஞானத்தில் உச்சத்திலிருந்தமையே காரணமாகும்
அவ்வாறு உன்னிப்பாக பகுத்துணருவதற்கு அவர்களுக்கு பொறுமையும் இல்லை நேரமும் இல்லை.
ஆனால் வேற்றக்கிரக வாசிகளான இவர்கள் பூமி மனிதர்கள் போலவே இருப்பதை பலவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்த வேற்றுக்கிரக வாசிகள் தமது விஞ்ஞான ஆற்றலை இன்னும் இன்னுமாய் அதிகரிப்பதற்கும் வளர்த்துக் கொள்வதற்குமாக பூமி மனிதர்களுடன் திருமண உறவை ஏற்படுத்தும் தொடர்ச்சியை வேலானந்தன்,சகுந்தலா தம்பதிகளின் மகளான மதுசாவினை தமது மகனான சரவணனுக்கு மனைவியாக்க வேண்டும் என்பதில் கணவனும் மனைவியும் பெரும் விருப்பம் கொண்டிருந்தனர்.
பூமியல்லாத வெளிக் கிரகமொன்றிலிருந்து ஜேர்மனியைத் தேர்ந்தெடுத்து போகும் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பத்துக் குடும்பங்களில் மகேந்திரராஜாவும் சசிகலாவும் அவர்களின் பிள்ளைகளான சரவணன் சாரிணி என்பவர்கள் தங்களின் தாயகம் நியூசிலாநது; என்று போகும் நகரத்தில் பதிவு செய்திருந்தனர்.
நியூசிலந்தில் வாழ்ந்ததற்கான நியுசிலாந்த குடிமக்கள் என்ற உறுதிசெய்யப்பட்ட ஆவணங்கள் கொடுக்கப்பட்டு அதனை அந்த நகர நிர்வாகமும் ஏற்றுக் கொண்டுவிட்டது.
பூமியிலிருந்து வேற்றக்கிரகத்திற்கு போகும் முயற்சியில் பூமியல் உள்ள நாடுகளின் முயற்சி நூறிலொரு மில்லிமீற்றர்கூட தாண்டவில்லை.ஆனால் வேற்றுக்கிரக மனிதர்கள் பூமியில் பலநூறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பூமி மனிதர்கள் நம்பியும் நம்பாலும் திகைத்துப் போய் நிற்கிறார்கள்.
அதே வேளை பூமி மனிதர்கள் பலர் காலத்துக்குக் காலம் வேற்றக்கிரக மனிதர்களால் கடத்தப்பட்டுமிருக்கிறார்கள் என்று உண்மையும் உண்டு.
ஒரு ஒழுங்குமுறையான திருமண உறவின் மூலம் பூமி மனிதர்களுடன் கலப்பினை ஏற்படுத்துவதன் மூலம் தமது மனிதர்களின் அறிவாற்றல் இன்னும் அதிகரிக்கும் திட்டத்திற்கமையவே மகேந்திரராஜா குடும்பமும் இன்னும் பலரும் பூமிக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள்.
ஆனால் இவர்களில் எவரிடமும் பூமி மனிதர்களுக்கும் இவர்களுக்குமிடையில் எந்த வித்தியாசத்தையும் காணவே முடியாது.
பூமி மனிதர்களைப் போலவே நடைஉடை பாவனை இருந்தாலும் இவர்களிடம் வெளிப்பார்வைக்கோ எழுந்தமானத்திற்கோ கண்டுபிடிக்க விசேட குணமும் இருந்தது.
மனிதர்களைப் போல இவர்கள் கோபப்பட மாட்டார்கள்.வேலை செய்யும் இடங்களில் தாம் எங்கிருந்து வந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளாதவாறு சுமுகமாகவே நடந்து கொள்வார்கள்.
தமக்கும் தமக்கு வேலை தந்த நிறுவனத்திற்குமிடையில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு புன்னகைதழும்பிய முகத்துடன் வரும் பிரச்சினைகளை நிறுவனத்தின் அதிகாரிகள் திருப்திப்படும் அளவுக்குத் தீர்வு கண்டு கொள்வார்கள்.

மனிதர்களைவிட பலமடங்கு புத்திசாலிகள் இவர்கள்.இவர்களின் கிரக விஞ்ஞானிகள் பூமி விஞ்ஞானிகளைவிட மிகப்பலமடங்கு முன்னேறியவர்கள்,மிகப்பெரும் அறிவு ஜீவிகளும்கூட,அதனால்தான் பல நுறு ஆண்டுகளாக தென்துருவத்தில் தமக்கான தொடர்பு இடத்தை வைச்சுக் கொண்டு தமது கிரகத்துக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் போய்வருகிறார்கள்.
பூமி மனிதர்களுக்கு வியர்க்கும் போது அவரவர் உடம்பின் வேதியல் நிலைக்கேற்பதாக வியர்வை மணம் வருவது போல இவர்களின் உடம்பிலிருந்து வருவதற்கப் பதிலாக சுகந்தமான வாசனையே வரும்.
இவர்களைப் பூமிக்கு அனுப்பிய போது,தமது பிள்ளைகளுக்கு பூமி மனிதர்களின் பிள்ளைகளுக்கே திருமணம் செய்து வைக்கவேண்டும் என்ற வேண்டுகோளும் விடப்பட்டிருந்தது..
பூமி மனிதர்களின் அறிவையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்திற்கமையவே வேற்றுக்கிரக விஞ்ஞானிகள் மகேந்திரராஜா தரம்சிங்கம் போன்ற பூமிக்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிடம் இப் பணிப்பை வேண்டுகோளாக விட்டிருந்தனர்.
இவர்களைப் பற்றி யூதர்கள் அறிந்திருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில்தானோ அவர்களும் தமது ஆண்கள் யூதர்கள் அல்லாதவர்களைத் திருமணம் செய்ய அனுமதிப்பதில்லை.ஆனால் ஜேர்மனிய ஆண்கள் அல்லது அறிவுஜீவிகள் என நம்பும் மற்றைய இன ஆண்கள் யூத இனப் பெண்களை விரும்பி திருமணம் செய்வதை அனுமதிக்கின்றனர்.
அதற்குக் காரணம் தமது யூத இனம் புத்திசாலிகளாகவும் உலகைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகவேதான்.
ஆனால் தமது கிரகத்தினர் தம்மைப் பணித்தற்கு அப்பால் மதுசாமீது மகேந்திரராஜாவுக்கும் சசிகலாவுக்கும் தமது மகன் சரவணனுக்கு மனைவியாகவும் தமக்கு மருமகளாக வரவேண்டும் என்ற இனம் புரியாத விருப்பத்தைக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் பழக்கத்திலேயே மதுசாமீது அதீத பாசத்தை சசிகலா கொட்டியிருந்தாள்.
மதுசாவின் தாயார்,மதுசாவிடம் ஏன் அங்கை இவ்வளவு நேரமும் மினக்கெடுகிறாய் என்று கேட்டதை மதுசா நான் வீட்டை போக வேணும் என்று சசிகலாவிடம் சொன்னதும்,சாப்பிட்டுவிட்டுப் போ மருமகளே என்று மதுசாவை சசிகலா விளித்தழைத்ததைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத மதுசா, தன்னை மருமகளே என்று அழைத்ததால் வியப்படைந்து அவளையறியாமலெ மனம் கிலுகிலுப்படைய ஒருpரு விநாடிகள் மௌமாகிப் பின் ஏன் அன்ரி என்னை மருமகளே என்று சொன்னனீங்கள் என்று கேட்டதும் மதுசாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது திகைத்த சசிகலா ஒருவாறு தன்னைச் சமாளித்து அழகான இனிமையான பெண்பிள்ளைகளைக் கண்டால் ஆம்பிளைப் பிள்ளையளை வைத்திருப்பவர்கள் மருமகளே என்று அழைப்பது ஒருவித எதிர்பார்ப்புக் கலந்த பாசத்தினால்தான் என்றவுடன், சாரிணி கள்ளச் சிரிப்புடன்,அப்படியென்றால் நான் மதுசாவை இங்கையுள்ளவை மாதிரி மச்சாள் என்று கூப்பிடலாந்தானே அம்மா என்று தாயாரைக் கேட்டதும்,தாராளமாக உரிமையுடன் கூப்பிடு; என்கிறாள் சசிகலா.

மதுசா,சசிகலா,சாரிணி என மூவருக்குமிடையில் நடந்த சம்பாசணையை மகேந்திரராஜாவும்,தர்மசிங்கமும்,பூரணேஸ்வரியும் இரசித்துச் சிரிக்க இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல சரவணன் மனதுக்குள் மகிழ்கிறான். எதுவுமே கதைக்காது சூழ்நிலையை மதுசா இரசிப்பது அவளின் முகம் சிவக்கத் தொடங்குவதிலிருந்து எல்லாரும் கவனிக்கத் தொடங்குகின்றனர்.
சசிகலா சரி எல்லாரும் உள்ளை வாருங்கள் சாப்பிடுவம் என்று அழைக்க இவ்வளவு நேரமும் எந்தச் சலனமும் இல்லாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பறவைகள் இரண்டும் திடீரென எழுந்து பறக்கத் தொடங்குகின்றன.
(தொடரும்….)
![]()