இலங்கை

கர்தினால் எனது புத்தகத்தை வாசித்திருக்க வேண்டும்; உதய கம்மன்பில கூறுகிறார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான எனது புத்தகத்தை வாசித்திருந்தால் பேராயர் மெல்கம் ரஞ்சித், விசாரணைகளை குழப்பும் வகையிலான செயற்பாடுகள் நடக்கின்றன என்று கூற மாட்டார் என்று பிவித்துறு ஹெல உறுமய தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான நடைமுறைகளை பின்பற்றி வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இதற்கு பின்னால் அரசியல் மறைகரங்கள் இருக்கின்றதா? என்ற சந்தேகங்கள் எழுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் கூறியிருந்த நிலையில், அது தொடர்பில் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றில் தனது கருத்துக்களை முன்வைக்கும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது கம்மன்பில மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான எனது புத்தகத்தை வாசித்திருந்தால் பேராயர் இவ்வாறான கருத்துக்களை கூற மாட்டார். நான் அவருக்கு எனது புத்தகத்தை கையளிக்க நேரமொன்றை கேட்டுள்ளேன். அவ்வாறு நேரம் கிடைக்காவிட்டால் தபால் மூலமாவது அதனை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பேன்.

அவர் தனது கருத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அவற்றுக்கான பதில்கள் இந்த புத்தகத்தில் உள்ளன. இந்த புத்தகம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் ஆகின்றன. இது அரசியல்மயப்படுத்தப்பட்டது. இராணுவத்தை பாதுகாப்பதற்கான முயற்சி, இதன்மூலம் ராஜபக்‌ஷக்கள் தப்பிப்பர் என்றெல்லாம் கூறுவது தவறான தர்க்கங்களாகும். ஆனால் புத்தகத்தில் உள்ள விடயம், பார்வை தவறானது என்று எவரும் கூறவில்லை. பொய்கள் பலவற்றுக்கு இதில் பதில்கள் உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *