அமெரிக்க பாடசாலையில் மீண்டும் பிரம்படி அறிமுகம்!

அமெரிக்காவின் மிஸோரி மாநிலத்தில் உள்ள ஒரு பாடசாலையில் மீண்டும் பிரம்படி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தத் தண்டனையை பாடசாலை 2001ஆம் ஆண்டு கைவிட்டது.

மாணவர்களின் பெற்றோருக்கும் அது குறித்துத் தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாக தி கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்கவே பிரம்படியை மீண்டும் செயற்படுத்துவதற்கு பாடசாலை முடிவு எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பாடசாலை நடத்திய ஆய்வில் பெற்றோர் கூடுதல் ஒழுங்கு நடவடிக்கைகள் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்

இன்னும் சிலர் மாணவர்கள் பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதற்குப் பதில் வேறொரு தண்டனை வேண்டும் என்று தெரிவித்திருந்ததாக தி கார்டியன் கூறியது.

அதனால் பிரம்படி மீண்டும் கொண்டுவரப்பட்டதாகப் பாடசாலை தெரிவித்தது.

தங்கள் பிள்ளைகளைப் பிரம்படிக்கு உட்படுத்தப் பெற்றோர்கள் அனுமதி வழங்கலாம். பாடசாலை தலைமை ஆசிரியரால் மட்டுமே பிரம்படி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button