கட்டுரைகள்

உளவு நிறுவனங்கள்!…. (தொடர்ச்சி 31) ….. மௌனஅவதானி.

ஓரு நாட்டுக்குள் உளவு நிறுவனங்கள், அந்த நாட்டை ஈடாட்டம் காண வைப்பதற்காக பலவிதமான நாசகார வேலைகளைச் செய்கின்றன.

தமது நாட்டுக்கு எதிராக, அந்நாட்டின் கட்டமைப்பின் இரகசியங்களை பணம், பெண், பொருளுக்கு ஆசைப்பட்டு வல்லரசு நாடுகளுக்கு கொடுப்பவர்கள் உண்டு.

அதே வேளை தாம் தமது நாட்டுக்கு எதிராக உளவு பார்த்து சதி செய்கிறோம் என்பதை உணராமலே இரகசியங்களை சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

யதார்த்தமாக பேசுகிறோம் சொல்கிறோம் என நினைத்துக் கொண்டு இரகசியங்களைச் சொல்வோரிடமிருந்து இறாலைப் போட்டுச் சுறாவைப் பிடிக்கும் தந்திரத்தை உளவு நிறுவன ஒற்றர்கள் கையாளுகிறார்கள்.

இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்திலேயே வளங்களில் அத்தியாவசியமான வளம் ஆரோக்கியமான மனித வளமேயாகும் என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது

ஒரு நாட்டில் எத்தனை செழிப்பான மனிதகுலத்திற்கு அத்தியாவசியமான வளங்களிருந்தாலும், அவற்றிலிருந்து பெறும் பலன்களால் மக்களின் வாழ்வு செழிப்புற்றாலும்கூட அந்த நாட்டு மக்கள் நோயற்ற ஆரோக்கியமான மக்களாக இருந்தால் மட்டுமே அந்த நாடு செழிப்பான நாடாகும்.

இன்றைய நாளுக்கான கணிணியுக அதிநவீன தொழில்நுட்பமுள்ள நாடக ஒரு நாடு இருக்குமாயினும்கூட அந்நாடு நோயுற்ற மக்களை அதிகமாகக் கொண்ட நாடாக இருக்குமானால்; அதன் வளர்ச்சி சறுக்குமரத்தில் ஏறுவதற்கு ஒப்பானதாகும்.

ஒரு நாட்டைச் சீரழிப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளில் மிகவும் மோசமான சதிக் கோட்பாடு என்பது நோய்க்கிருமிகளை அந்த நாட்டு மக்கள் மீது தொற்றுக் கிருமிகளாகப் பரப்புதல் என்பதேயாகும்.

அதைக் காலம் காலமாக பலநாடுகள் செய்து வருகின்றன.நாடுகளை மேலெழுந்தவாரியாக பார்க்குமிடத்தில் எல்லா நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக இருப்பது போலவும், ஒரு நாட்டுக்க இன்னொரு நாடு உதவி செய்வது போலத் தோன்றினாலும் ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டின் வளர்ச்சியை மிகவும் உன்னிப்பாக கவனித்தே வருகின்றன.

தனது நாட்டு உற்பத்திகளை அனைத்து நாடுகளுமே கொள்வனவு செய்ய வேண்டுமென்பதற்காக, தமது உற்பத்திப் பொருட்களுக்குச் சமனான பொருட்களை மற்றைய நாடுகள் உற்பத்தி செய்வதை தடுக்கும் நோக்குடன் சதிக் கோட்பாட்டுக்கு அமைவான நோய்க் கிருமிகளை பரப்புதலை மேற்கொள்ளுகின்றன.

ஒரு கால எல்லையை வகுத்து திட்டமிட்ட ஆண்டுக்குள் தமது நாடு உலக நாடுகளுக்குள் முதல் நிலை வல்லரசாக இருக்க வேண்டும் என்பதற்;கமைய செயல்படுகின்றன.

நோய்க்கான நுண்கிருமிகளின் பரப்புதல் என்பது, நோயுற்றவர்களால், உற்பத்தியிழப்பு, முற்றாக உற்பத்தி முடக்கம்,உற்பத்திக் குறைவினால் பாவனையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில்,அவ்வுற்பத்தியை அனைவருமே வாங்க முடியாத, விலையைத் தொழிற்சாலைகளும் சந்தைப்படுத்துவோரும் நிர்ணயிக்கும் நிலையை ஏற்படுத்துகின்:றது.

இவ்விiலையேற்றம் என்பது தி;ட்டமிட்ட விலையேற்றம் என்பதை பொதுமக்கள் மத்தியில் காட்டிக் கொள்ளாமலும், திட்டமிட்ட விலையேற்றந்தான் என்பதை பொதுமக்கள் உணராதிருப்பதற்காக நோய் பரவுதலால் ஏற்படும் பாதிப்பால் இவ்விலையேற்றம் ஏற்பட்டது என்பதை பொதுநம்பிக்கைக்கு உட்படுத்துவதேயாகும்.

நோய்க்கான நுண்கிருமிகளை உளவு நிறுவனங்கள் பலவழிகளில் பரப்புகின்றன.தமது நாட்டுக்காக இன்னொரு நாட்டில் தேசவிசுவாசம் என்ற பெயரில் தமது உடலில் நோய்கிருமிகளைச் சுமக்கின்ற நோய்காவிகளாக உளவு நிறுவனங்களைக் கொண்டு நாடுகளில் அதற்கான மக்கள் செயல்படுகிறார்கள்.

இந்நோய்க் காவிகள் தம்முடலில் நோய்க்கான நுண்ணுயிரை சுமக்கச் செய்யும் போதே,நோய்க்காவிகளுக்கு அந்நுண்ணுயிர்க் கிருமியால் நோய்ப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதற்கான தடுப்பு மருந்துகள் ஏற்றப்படுகின்றன.

இத்தகு நோய்க்காவிகள் சுற்றுலாப் பயணிகளாகவும், தொழில்சார் ரீதியிலும் எந்த நாட்டின் கட்டமைப்புகளைச் சிதைக்க வேண்டுமென்று நினைக்கிறார்களோ அந்நாடுகளுக்கு உளவு நிறுவனங்கள் அனுப்பி வைக்கின்றன.

நோய்க்காவிகளாக மனிதர்கள் பயன்படுத்தலில் அவர்களின் இயல்பான மூச்சுக்காற்று, தும்மல் , இருமல் போன்றவற்றிலிருந்து நோய்க்காவிகளின் உடலில் இருக்கும் நுண்கிருமிகள் மறறையவர்களுக்குப் பரவிவிடுகின்றன.

நோய்க்காவிகள், மக்கள் அதிகமாக நடமாடும் அல்லது பயன்படுத்தப்படும் இடங்களான சந்தைகள், கடைகள், பேருந்துகள்,தொடரூந்துகள்,படமாளிகைகள் போன்றவற்றுக்குச் சென்று அவர்கள் தும்முவதாலோ இருமுவதாலோ நோய்த்தொற்று கிருமி வேகமாகப் பரவி விடுகின்றது.

நோயை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி நுண்கிருமிகளை மனிதர்கள் மட்டுமல்ல, இறைச்சிக்காக வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் விலங்குகளின் உடலில் நோய்கிருமிகளை ஆய்வுக்கூடங்களால்கூட உடனடியாக அறிய முடியாத வகையில் செலுத்தி அனுப்பப்படுகின்றன.

இத்திட்டத்தை வகுப்பவர்கள், பலகோடி பணத்தை இலஞ்சமாகவோ அல்லது இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று பெண் , பொருள் போன்றவற்றால் இதனைச் சாதிக்கின்றனர்.

இறைச்சிக்கான விலங்குகளை வளர்க்குமிடத்திலேயே, உளவு நிறுவனங்களுக்கு விலை போகக்கூடியவர்களால் இத்திட்டம் நிறைவேற்றப்படுகின்றது.

மனித உடலில் உடனடியாக வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தும் நுண்கிருமிகள்,மனித உடலில் பரவி உறங்குநிலையில் பலநாட்கள் இருந்ததன் பின் பிறகு வேகமெடுத்து பரவுதல், நீறுபூத்த நெருப்பைப் போன்று நோயற்ற தன்மையாக உடலை வைத்திருந்து பின்னர் மீண்டும் நோயை ஏற்படுத்துதல் என உயிர்க்கொல்லி நுண்கிருமிகளை உளவு நிறுவனங்கள் உற்பத்தி செய்து நாடுகளை சீரழித்து வருகின்றன.

இன்று மருந்து உற்பத்தியில், மருந்து உற்பத்தியாளர்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை உற்பத்தி செய்கின்றனர்.மருந்து உற்பத்தி உலகை ஆளும் பெரும் வணிகமாகிவிட்டது.ஒரு நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளால் பல நோய்களை உருவாக்கும் வேதியல் கலப்புகளும், நோய்களை ஏற்படுத்தும் உறங்குநிலை நுண்கிருமிகள் அடங்கிய மருந்துகளை உற்பத்தி செய்து விற்கின்றன.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *