நடுகைக்காரி!…. 41….. ஏலையா க.முருகதாசன்.


தாய் பூசிவிட்ட திருநீறு, காதலி பாறு பூசிவிட்ட திருநீறு, காளி கோவிலில் பூசிய திருநீறு, புளியடி வைரவர் கோவிலில் பூசிய திருநீறு,முத்துமாரியம்மன் கோவிலில் பூசிய திருநீறு, இப்படி நெற்றியில் ஒன்றன் மேல் ஒன்றாக திருநீறைப் பூசியதால் பலவிதமான திருநீற்றுக் கோடுகளுடன் ஞானம் தெல்லிப்பழைப் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்திற்குள் சைக்கிளில் நுழைந்து சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டுப் மூச்சிரைக்க இன்ரர்வியூ நடக்கும் மாடிக்குப் போக படியேறியவனை,முன்னால் படியில் ஏறிக் கொண்டிருந்த சங்கத்தின் பொதுமுiகாமையாளர் நவரத்தினம் மூச்சிரைக்க ஏறிவரும் ஞானத்தைப் பார்த்தவர் அவனின் நெற்றியை ஒரு புன்னகையுடன் பார்த்து’இன்ரவியூ நடக்க நேரங் கிடக்குது, ஆறுதலாக வாருங்கள் „ என்று சொல்லிவாறு மாடியில் தெற்குப் பக்கமாக நடந்து அங்கு கூட்டங்கள் நடக்கும் அறைக்குள் போகிறார்.
படியேறி முடித்த ஞானம் நிதானமாக நின்று ஒரு முறை மூச்சை இழுத்துவிட்டு தன்னை இளைபாற்றிக் கொண்டான்.
நின்ற இடத்திலிருந்து வலதுபக்கமாக பார்த்த போது மண்டபத்திற்கருகில் இருக்கும் அறையில் ஆட்கள் இருப்பது தெரிந்தது.
மெதுவாக நடந்து அறைக்குள் போனவன்,அங்கே ஆண்கள் ஆறு பேர் பெண்கள் நான்கு பேரென பத்துப் பேர் இருப்பதைக் காண்கிறான்.
எல்லாரும் தன்னைப் போல இன்ரவியூவுக்குத்தான் வந்திருப்பார்கள் என நினைச்சபடி உட்காருகிறான்.
„கலோ’ என்று பொதுவாகச் சொல்லியபடி உட்காருகிறான்.அவன் கலோ சொல்லியதற்குப் சிலர் மெதுவாக கலோ என்றும் சிலர் அதனை ஏற்றுக் கொண்டது போல புன்முறுவலித்து தலையை ஆட்டுகின்றனர்.![]()
எல்லோருடைய பார்வையும் ஞானத்தின் நெற்றியை நோக்;கி செல்கிறது.அங்கை உட்கார்ந்திருந்தவர்கள் அனைவரும் நெற்றியில் தடிப்பாகவும் மெலிதாகவும் திருநீறு பூசிக்கொண்டு வந்திருந்தார்கள்.சிலர் மைசூர் பருப்பளவு சந்தனப் பொட்டும் வைச்சுக் கொண்டுதான் வந்திருந்தார்கள்.மூன்று பெண்கள் மிக மெலிதாக கோடுபோல திருநீறும் கறுப்புப் பொட்டும் வைச்சிருந்தார்கள்.
ஒரு பெண் நெற்றியில் குங்குமப் பொட்டு வைச்சிருந்தார்.அவரின் கழுத்தில் தாலியும் இருந்தது.அவளை உற்றுப் பார்த்தவன் அவள் தன்னுடன் ஒன்றாக படித்த,தன்னைக் காதலிச்ச புஸ்பகலா என்று கண்டுபிடித்துவிடுகிறான்.
ஞானம் உள்ளே வந்த போதே தன்னோடு படிச்சவன் தான் காதலிசசவன் என்பதைக் கண்டுகொண்ட அந்தப் பெண் அமைதியாக இருந்தாள்.அந்த அமைதிக்கு காரணம்
நடக்கப் போகிற இன்ரவியூ பற்றிய யோசனையுடன் இன்னொரு காரணமும் இருந்தது.
„கலோ நீங்கள் புஸ்பாதானே „என்று கேட்ட ஞானம் அவளிடமிருந்து பதில் வருவதற்கு முன்னரே எழுந்து சென்று அவளுக்கருகில் இருந்த கதிரையில் உட்காருகிறான்.
ஞானம் அறைக்குள்ளே வந்த போத சிலர் அவனது நெற்றியை உற்றுக் கவனித்திருந்தார்கள்.தொடர்ந்தும் அவர்கள் அவனுடைய நெற்றியை பார்ப்பதும் அவனுக்கு கேளாதமாதிரி ஏதோ சொல்லி அவனுக்குத் தெரியாத மாதிரி சிரிப்பதுமாக இருந்தார்கள்.
அவனுடைய நெற்றியில் மேலும் கீழுமாக ஐஞ்சுவிதமான திருநீற்றுக் கோடுகள் இருந்ததுதான் அதற்குக் காரணம்.
புஸ்பலகாவுக்கு பக்கத்தில் உட்பகார்ந்த ஞானம்,’என்ன புஸ்பா பள்ளிக்கூடத்திலிருந்து நின்றதும் கல்யாணம் செய்திட்டியளா, எனக்குத் தெரியாதே எனக்கேன் சொல்லவில்லையென்று „கேட்டான்.
„தாலி கட்டியிருக்க வேண்டியவனே இப்படிக் கேட்கலாமா’ என்று அவன் காதருகில் அவள் கேட்டதும்,அவன் அதிர்ந்து போனாள்.
புஸ்பகலா தெல்லிப்பழை வீமான்காமத்தைச் சேர்ந்தவள்.ஞானத்தோடு ஒன்றாக படிச்சவள்.ஞானத்தில் அவளுக்கொரு ஈர்ப்பு இருந்தது.அதை அவள் ஞானத்திடம் ஒருநாளும் சொல்லவில்லை.அத நாளடைவில் காதலாக மாறிக் கொண்டிருந்தது.
புஸ்பகலா ஞானத்தை காதலிச்சது அவர்களுடைய வகுப்பையும் தாண்டிப் பலருக்குத் தெரிந்திருந்தது.பள்ளிக்கூடத்தில் ஆம்பிளைப் பிள்ளையள் பொம்பிளைப் பிள்ளையளோடை கதைச்சதை யாராவது ஆசிரியரோ அல்லது ஆசிரியையோ கண்டால் அவரவர்கள் தமக்குள் ஒரு கற்பனையை வளர்த்துக் கொணடு சக ஆசிரியர்களுடன் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளைப் பற்றிக் கதைப்பதும்,அந்த மாணவ மாணவ மாணவிகள் படிப்பில் கொஞ்சம் குறைவெண்டாலே „இப்ப உனக்கு வேறை யோசனை வந்திட்டுதல்லோ’ எனப் பட்டும் படாமல் சொல்லிக் கேலி செய்வதும் உண்டு.
புஸ்பகலா ஞானத்தை விரும்புவது வேகமாகப் பரவி விலங்கியல் ஆசிரியை சுந்தரராஜன் ரீச்சரின் காதுவரை செல்ல,ஒரு நாள் மத்தியானம் தண்ணீர்ப் பைப்படிக்குப் போய்த் தண்ணீர் குடிச்சிட்டு வந்த புஸ்பகலாவை ஸ்ராப் றூம் யன்னலோடுநின்ற சுந்தரராஜன் ரீச்சர்’ புஸ்பகலா இஞ்சை வா „ என்று கூப்பிட்டு,’நான் ஒரு கதை கேள்விப்பட்டனான், பன்னாலைக்கு மருமகளாகப் போறியாமே, படிக்கிற வேலையைவிட மற்ற எல்லா வேலையையும் செய்வாய் போல’ என நக்கலடிக்க, அந்த நேரம் பார்த்து ஞானம் தண்ணீர் குடிக்கவென பைப்படிக்கு வந்து கொண்டிருந்தவனைக் கண்ட ரீச்சர்’ ஓகோ எங்கை சந்திக்கிறது எப்ப சந்திக்கிறது என்று எல்லாம் சொல்லி வைச்சுத்தான் நடக்குதோ’ என்றவர்
புஸ்பகலாவைப் பார்த்து „நீ போ’ என்று அவளைப் போகச் சொல்லிவிட்டு’ஞானசெல்வம் இஞ்சை வா’ என்று கூப்பிட அவனும் „என்ன ரீச்சர் „ என்று சுந்தரராஜன் ரீச்சர் நின்ற இடத்திற்கு போக, சில அடிகளே எடுத்து வைச்சு நடந்து கொண்டிருந்த புஸ்பகலா திரும்பிப் பார்த்து நின்றவள், வேகமாக திரும்பி வந்தவள் சுந்தரராஜன் ரீச்சர் முகத்தை நேருக்கு நேரே பார்த்து’ அவரைக் கூப்பிட்டு என்ன கேட்கப் போறியள் என்று எனக்குத் தெரியும், ஏன் படிக்கிற பிளளையள் காதலிக்கக்கூடாது என்று சட்டமா, நீங்கள் ஒரு ரீச்சர் மாணவர்களோடை எப்படிக் கதைக்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியவில்லை’..
„சும்மா போன என்னைக் கூப்பிட்டு பன்னாலைக்கு மருமகளாகப் போகப் போறியா என்று நக்கலாக கேட்கிறியள், இப்ப சொல்றன் நானும் ஞானமும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறம், படிப்பு முடிஞ்சதும் நாங்கள் இரண்டு பேரும் கல்யாணம் கட்டுவம்,பன்னாலைக்கு மருமகளாகப் போவன், நீங்கள் ஸ்ருடன்சைப் பற்றி எவ்வளவு பச்சை பச்சையாக கதைக்கிறது என்று எங்களுக்கும் தெரியும்..’ என்று மூச்சிரைக்க கோபமாகவும் சத்தமாகவும் அழுகையுமாக சொன்னதைக் கேட்டு ஸ்ராப் றூம் கதிரைகளில் உட்கார்ந்திருந்த ரீச்சேர்ஸ் அதஇதுனை பேரும் யன்னலடிக்கு வந்துவிட்டார்கள்.
யன்னலடிக்கு வந்த முருகையா மாஸ்ரர் சுந்தரராஜன் ரீச்சரை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஞானத்தையும் புஸ்பகலாவையும் பார்த்து „நீங்கள் இரண்டு பேரும் போங்கள்’ என்று சொல்ல, தண்ணீர் குடிச்சிட்டு வந்த புஸ்பகலா தண்ணீர் குடிக்கப் போன ஞானத்துடன் திரும்பப் போவதைக் கண்ட சுந்தரராஜன் ரீச்சர் „அவளின்ரை கொழுப்பை; பார் „ என்று சத்தமாகச் சொன்னவர்,வாய்க்குள் ஏதோ முணுமுணுக்;கிறார்,நாளைக்கு இருக்குது அவை இரண்டு பேருக்கும் „என்றவுடன்,’நாளைக்கு உங்களால் அவைக்கு என்ன செய்ய முடியும் „ என்று சத்தமாக கேட்ட முருகையா மாஸ்ரர், நீங்கள் அந்தப் பிள்ளையைப் பற்றி வாய்க்குள் முணுமுணுத்தது எனக்கும் கேட்டது,இஞ்சை எல்லாருக்கும் கேட்டும் இருக்கும்,நீங்கள் நாளைக்கு அந்தப் பிள்ளையைப் பற்றி பிரின்சிபாலிடம் ஏதாவது கொம்பிளையின்ற் பண்ணப் போனால் நானும் இப்ப நீங்கள் முணுமுணுத்தியளே அதன் தாற்பரியத்தை அவருக்குச் சொல்வன் „ என்றவுடன் ஸ்ராப் றூம் கொந்தளிக்கத் தொடங்கியது.
„தண்ணீர் குடிச்சிட்டுப் போன நீ ஏன் திரும்பி என்னோடை வாறாய்’ என்று புஸ்பகலாவைப் பார்த்து ஞானம் கேட்க,’ வேணுமெண்டு அவா பார்க்க வேண்டும் என்றுதான் உன்னோடை வந்தனான், உன்னோடைதானே வாழ்க்கை பூராவும் வரப் போறன் „ என்றவள்,மெதுவாக அவனின் விரல்களைத் தொடுகிறான்.
„ அதுசரி நீ ஏன் சுந்தரராஜன் ரீச்சரிட்டை நான் உன்னை லவ் பண்றது என்று சொன்னனி’ என்று கேட்க „ உண்மையைத்தானே சொன்னனான் அதுக்கு ஒரு முற்றப்புள்ளி வைக்கத்தான் சொன்னனான்’ என்றவள் நடக்கிறது நடக்கட்டும் பார்ப்பம்’ என்கிறாள்.
„புஸ்பா நான் உன்னை லவ் பண்ணேலை ஆனால் உன்னிலை எனக்கு ஒரு விருப்பம் இருக்கு,அதைப் போய் நீ காதல் …’ அவன் சொல்லி முடிக்க முந்தி „அதுக்குப் பெயர்தான் காதல்’என்று இறுக்கமாக சொல்கிறாள் புஸ்பகலா.
ஆனால் சிறு பொறி பெரும் நெருப்பு மாதிரி சுந்தரராஜன் ரீச்சர் முணுமுணுத்த சொல் ஸ்ராப் றூம் எங்கும் பரவத் தொடங்கியது..
(தொடரும்)
![]()