தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங் – 3 வயது சிறுமி உலக சாதனை!

கரூரில் 3 வயது சிறுமி 5 மணி நேரம் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

கரூரை சேர்ந்த கருப்பையா – லதா தம்பதியினரின் மகள் மாதங்கி ஸ்ரீ. இவர் சிறு வயதிலேயே ஸ்கேட்டிங்கில் சிறந்து விளங்கியதால் இதில் உலக சாதனை நிகழ்த்த பெற்றோர்கள் விரும்பினர்.

இதையடுத்து கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு 1 மணி நேரம் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்த முதல் இளம்வயது சிறுமி என்ற உலக சாதனையை படைத்திருந்தார்.

இந்த நிலையில், தொடர்ந்து 5 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இடைவிடாமல் தொடர்ந்து ஐந்து மணி நேரத்தில் 365 சுற்றுகள், 26.5 கி.மீ தூரத்தை கடந்து, உலக சாதனையை ஏற்படுத்தினார் 3 வயது சிறுமி மாதங்கிஸ்ரீ.

இந்த உலக சாதனையை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் இந்தியா சிஇஓ, அரவிந்த், தேசிய தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தேசிய நடுவர்கள் லாவன்யா, ரஞ்சித் ஆகியோர் சிறுமியின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர்.

Loading

Back to top button