சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 74 வயது தாத்தா!
இலங்கையில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று தோற்றியுள்ளார். நெலுவ – களுபோவிட்டியன பகுதியில் வசிக்கும் கலன்கொடகே சந்திரதாச என்ற வயோதிபரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
| க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற ஆசையின் காரணமாக அவர் விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய இரண்டு பாடங்களுக்கு தோற்றியுள்ளார். கற்றது எதுவும் வீணாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். |
![]()