கவிதைகள்

என்னவளேநினைத்தேன்!…. ( கவிதை ) ….. தமிழ்மகள் பரா.

என்னவளே உன்தோள்
சாய்ந்திட நினைத்தேன்
நினைத்தேன் வந்தாய்
உன்னிடத்தில் தந்தேன்
தந்தேன் உள்ளத்தை
தருவாயா ?இன்பத்தேன்
இன்பத்தேனே அள்ளியே
அணைத்திட விளைந்தேன்
விளைந்தேன் ஆருயிரை
எட்டியே பிடித்தேன்
பிடித்தேன் இசைந்தாள்
ஆசையாய் கொடுத்தேன்
கொடுத்தேன் கொடுத்தாள்
திகட்டிடாத அன்புத்தேன்
அன்புத்தேன் கலந்து
ஆசையாய் எடுத்தேன்
எடுத்தேன் உலகமே
அவளென மறந்தேன்
மறந்தேன் கனவோவென
என்னவளே நினைத்தேன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *